எவ்ளோதான் காசு வச்சிருந்தாலும் டாடா கார்களை வாங்கறது ஈஸி இல்ல! ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை புக்கிங் (Booking) செய்தால், டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில், அதாவது நடப்பு மார்ச் மாத நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு எவ்வளவு காத்திருப்பு காலம் (Waiting Period) நிலவி கொண்டுள்ளது? என்பதைதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.

எவ்ளோதான் காசு வச்சிருந்தாலும் டாடா கார்களை வாங்கறது ஈஸி இல்ல! ஏன் தெரியுமா?

டாடா நிறுவனத்தின் கார்களிலேயே தற்போது அதிக காத்திருப்பு காலம் கொண்ட மாடலாக இருப்பது டாடா நெக்ஸான் ஏஎம்டி (Tata Nexon AMT) ஆகும். இந்த மாடலை நீங்கள் டெலிவரி பெற வேண்டுமென்றால், 10 முதல் 14 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக டாடா நெக்ஸான் மேனுவல் (Tata Nexon MT), (Tata Punch AMT) மாடல்களுக்கு தலா 8 முதல் 10 வாரங்கள் காத்திருப்பு காலமாக இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari), டாடா பன்ச் மேனுவல் (Tata Punch MT) ஆகிய மாடல்களுக்கு, 6 முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பு காலமாக உள்ளது. அதே சமயம் டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார்களுக்கான காத்திருப்பு காலம் தலா 4 முதல் 6 வாரங்கள் வரை இருக்கிறது.

எவ்ளோதான் காசு வச்சிருந்தாலும் டாடா கார்களை வாங்கறது ஈஸி இல்ல! ஏன் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கான காத்திருப்பு காலம் இவ்வாறாக உள்ள நிலையில், பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதில், டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) மற்றும் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

டாடா அல்ட்ராஸ் காரின் இந்த புதிய மாடல்களின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) என்ற பெயரில், நடப்பாண்டின் இறுதிக்குள்ளாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் நடப்பாண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடர்ச்சியாக பல்வேறு புதிய மாடல்களை களமிறக்குவதன் மூலம், போட்டி நிறுவனங்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்களின் வருகை மூலம் எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை சிறப்பான வகையில் உயர்வதற்கான வாய்ப்புகளும் பிரகாமசாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 23:51 [IST]
English summary
Tata cars waiting period march 2023 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+