இந்தியாவே காத்து கிடக்கும் டாடா காரை பற்றிய ரகசியம் கசிந்தது! மாருதிக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும்.

டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை எலெக்ட்ரிக் (Electric) மற்றும் வழக்கமான ஐசி இன்ஜின் (Internal Combustion Engine) வெர்ஷன்கள் ஆகும். இதில், ஐசி இன்ஜின் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Curvv

கடுமையான போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷன் நிலைநிறுத்தப்படவுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுடன் டாடா கர்வ் போட்டியிடும்.

இதுதவிர எம்ஜி அஸ்டர் (MG Astor), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும், டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனையில் சவால் அளிக்கும். வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tata Curvv Rear Profile

இதை தொடர்ந்து 2024ம் ஆண்டிலேயே டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் ஐசி இன்ஜின் வெர்ஷனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்படலாம்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுமே வழங்கப்படும். மறுபக்கம் டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400-500 கிலோ மீட்டர் வரை பயணிக்க கூடிய பேட்டரி வழங்கப்படலாம்.

இந்த சூழலில், டாடா கர்வ் காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும் டாடா கர்வ் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டால், அது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும்.

எனவே அதிக மைலேஜ் வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களை இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கவர முடியும். பொதுவாக ஒரு கார் நிறுவனம் முதலில் பெட்ரோல் இன்ஜின் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும். அதற்கு பிறகு குறிப்பிட்ட காலம், நேரம் எடுத்து கொண்டுதான் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரும்.

ஆனால் டாடா கர்வ் காரின் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்திலேயே, சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மீதான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

டாடா கர்வ் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 2 டேங்க் செட்-அப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செட்-அப் ஏற்கனவே டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) காரில் வழங்கப்பட்டு வருகிறது. சிஎன்ஜி கார்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே பூட் பகுதியில் பொருட்களை வைக்க போதிய இடவசதி இருக்காது என்பதுதான்.

இதற்கு சிங்கிள் டேங்க் செட்-அப்தான் காரணம். அது இடத்தை அடைத்து கொள்ளும். எனவேதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சற்று மாற்றி யோசித்து, சிஎன்ஜி கார்களில் 2 டேங்க் செட்-அப்பை வழங்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வைத்து கொள்ள ஓரளவிற்கு இடவசதியை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளிட்ட கார்களில், தற்போது சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. டாடா கர்வ் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 21, 2023, 14:20 [IST]
English summary
Tata curvv cng in the works all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+