டாடாவோட இந்த காரா ரோடுல நிக்குது! முழுசா மறைச்சிருந்தாலும் அழகு அல்லுது! மார்க்கெட்டையே புரட்டிபோட போகும் கார்

டாடா மோட்டார்ஸ் வெகுவிரைவில் இந்திய சந்தையில் புதுமுக கார்கள் சிலவற்றை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் கர்வ்-ம் ஒன்று ஆகும். இந்த காரின் சோதனை ஓட்ட மாடலே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றது.

முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் அந்த கார் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் சாலையோரத்தில் பார்க் செய்திருந்தபோது எடுக்கப்பட்ட அந்த காரின் படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் சோதனை ஓட்டம் செய்ய தொடங்கி இருப்பது, அந்த காரை அது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப் போகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

Tata curvv front view

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான தோற்றத்தில் இந்த காரை டாடா உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் கூபே ரக காராகும். டாடா நெக்ஸானுக்கு கூபே அவதாரம் வழங்கியதைப் போல் இந்த கார் காட்சியளிக்கின்றது. முழுசாக அதன் உருவம் வெளிப்படவில்லை என்றாலும் அந்த காரின் ஸ்டைல் எப்படி இருக்கும் எங்களால் யூகிக்க முடிகின்றது.

அந்தவகையில், இதன் விண்ட்ஷீல்டு சாய்ந்த நிலையில் சற்று ஷார்ப்பான லுக்கில் இருப்பதும், மெல்லிய இழை போன்ற லைட்டுகள் பின் மற்றும் முன் பக்கத்தில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. தற்போது தரிசனம் வழங்கி இருப்பது டெஸ்ட் வாகனம் என்பதால் அது உற்பத்தி நிலைக்குத் தயாராகும்போது, அதாவது, விற்பனைக்கு வரும் கர்வ் கணிசமான மாற்றங்களைக் கொண்டதாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tata curvv suv spied

மேலும், இந்த கார் மின்சாரம் மற்றும் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட கார் மாடலாகவும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஐசிஇ எஞ்ஜினைப் பொருத்த வரை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி என பன்முக மோட்டார் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், முதலில் மின்சார வெர்ஷனில் கர்வ் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னரே இதன் ஐசிஇ தேர்வுகள் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன. இந்த காரின் வருகை அடுத்த ஆண்டில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது கர்வ் எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தீவிரம் செய்யப்பட்ட இருக்கின்றது.

Tata curvv test mule

பிளாக்பேர்ட் திட்டத்திற்கான அடித்தளமாக செயல்படும் ஜென் 2 பிளாட்பாரத்தில் வைத்தே இந்த காரை டாடா உருவாக்கி வருகின்றது. இது புதிய பிளாட்பாரமாக இருந்தாலும் தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் டாடா கார்களைப் போலவே அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நெக்ஸான், பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாக இருக்கின்றன. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த ரேட்டிங்கை அந்த கார்கள் பெற்றன. இதைப் போலவே பாதுகாப்பு விஷயத்தில் கர்வ்-ம் கெத்து காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tata curvv rear

அதேவேளையில், தற்போது விற்பனையில் இருக்கும் டாடா கார்களைக் காட்டிலும் அதிக செயல் திறன்மிக்க மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக புதிய கர்வ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் இந்திய வருகை தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி அஸ்டர், கியா செல்டோஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் இந்திய சந்தையில் பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அதில் ஒன்றாகவே கர்வ் இருக்கின்றது. அட்டகாசமான தோற்றம் மற்றும் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இந்த காருக்கு எதிர்பார்ப்பு மிக மிக அதிகம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 12, 2023, 19:10 [IST]
English summary
Tata curvv suv spied in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X