உடல் முழுக்க மறைப்புகளுடன் சாலையில் வலம் வந்த டாடா கார்.. அந்த காரா அது?.. ஒட்டுமொத்த நாடோட எதிர்பார்ப்பு இது!

உடல் முழுக்க மறைப்புகளுடன் டாடாவின் தயாரிப்பு ஒன்று இந்திய சாலையில் வலம் வந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அது என்ன கார்? அதன் சிறப்புகள் என்ன? அது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின்கீழ் பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி அதன் கை வசம் இருக்கும் கார் மாடல்களே இந்தியாவை ஆள போதுமானவையாக இருக்கின்றன.

Tata curvv

இருப்பினும், இந்தியர்களுக்கு புதிய படைப்புகளை வழங்குவதில் அதிகம் ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது, நமது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வே தற்போது அரங்கேறி இருக்கின்றது. நிறுவனம் புதுமுக கார் மாடல் ஒன்றை தீவிரமாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த செயலில் ஈடுபட்டு இருக்கின்றது. உருவ அமைப்பை வைத்து பார்க்கையில் அது கர்வ் என தெரிகின்றது. இந்தியர்கள் மத்தியில் பெரிதும் ஏற்படுத்தி இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை டாடா மோட்டார்ஸ் இந்தியர்களுக்காக ஐசிஇ (எரிபொருளில் இயங்கும்) வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் இரு விதமான அவதாரத்தில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இதை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், சமீபத்தில் நிறுவனம் அசூரா எனும் பெயருக்கான வர்த்தகை பதிவைச் செய்தது. இந்த பெயரிலேயே டாடா மோட்டார்ஸ் இந்தியாவை களம் காண இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதாவது இந்த பெயரில் கர்வ் விற்பனைக்கு வரும் கூறப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் டாடா தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இதேபோல், இதன் அதிகாரப்பூர்வ விற்பனை வருகை பற்றிய தகவலையும் டாடா மோட்டார்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் டாடாவின் இப்போதைய நடவடிக்கையின் வாயிலாக கர்வ் விரைவில் விற்பனைக்கு வரலாம் என்பதை நமக்கு மிகவும் ஸ்ட்ராங்காக தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த காரை நடப்பாண்டில் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருடன் சேர்த்து இன்னும் சில கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது. இருப்பினும், விரைவில் இந்த காரே நாட்டில் விற்பனைக்கு வருவதற்கான சூழல்கள் தென்படுகின்றன.

ஏற்கனவே முழுமையாக இந்த காரை காட்சிப்படுத்திவிட்ட நிலையில் தற்போது அந்த காரை டாடா மோட்டார்ஸ் முழுமையான மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது. இதன் வாயிலாக அக்காரில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கும் என யூகிக்க முடிகின்றது. புதிய மாற்றங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்பதே இதன் பொருளாகும்.

கர்வ் ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரை தழுவியே சமீபத்திய வெளியீடுகளான நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்களை டாடா மோட்டார்ஸ் அப்கிரேட் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால் ஏற்கனவே அதிக கவர்ச்சியான தோற்றத்தில் இருந்த இந்த கார்கள் மேலும் பலமடங்கு அதிக கவர்ச்சியான கார்களாக தற்போது மாறி இருக்கின்றன.

ஆகையால், லைட் செட்-அப் மற்றும் சிறப்பு அலங்கார விஷயங்களில் இந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியான இருக்கப் போகின்றன. இதுதவிர, கர்வ் காரில் ஃப்ளஷ் ரக கைப் பிடிகள் கொண்ட கதவுகள், சாய்வான ரூஃப், எல்இடி லைட்டுகள், 10.25அங்குல டிஎஃப்டி திரை, 12.3அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டச் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதிக் கொண்ட ஏசி, பனோரமிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட அம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் முதலில் விற்பனைக்கு வருமா அல்லது எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வெர்ஷன் முதலில் விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுவதால் முதலில் எலெக்ட்ரிக் கர்வ்-வே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகளவில் இந்தியர்கள் மத்தியில் பரவிக் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் அதன் முதல் தரிசனமான 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்யப்பட்டபோதே பலரின் மனதைக் கவர்ந்துவிட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரும் நாட்களில் இன்னும் பல புதுமுக கார் மாடல்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன. அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கார் மாடலாகவே கர்வ் இருக்கின்றது. இந்த காரின் மின்சார வெர்ஷன் ஓர் முழு சார்ஜில் 500 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை தரும் என கூறப்படுகின்றது. ஆகையால், இதன் மின்சார வெர்ஷனை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களும் சற்று அதிகம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 8:30 [IST]
English summary
Tata curvv suv spotted again while testing in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+