பல்க் ஆர்டர்! டாடா வண்டிகளை மொத்தமா வாங்கி போட்ட அரசு! ஒரே நேரத்துல இவ்ளோ பெரிய பிரம்மாண்ட டெலிவரியா!

இந்தியாவின் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. கார் (Car) மட்டுமல்லாது, வேன் (Van) மற்றும் பஸ் (Bus) போன்ற வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த சூழலில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெரிய ஆர்டர்களை கைப்பற்றுவதிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கங்களின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் பஸ் (Electric Bus) ஆர்டர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆர்டர்களை எல்லாம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இந்த வரிசையில் மேற்கு வங்க மாநில அரசிடம் இருந்து, விங்கர் (Tata Winger) வாகனங்களுக்கான ஆர்டர்ரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

பல்க் ஆர்டர்! டாடா வண்டிகளை மொத்தமா வாங்கி போட்ட அரசு!ஒரே நேரத்துல இவ்ளோ பெரிய பிரம்மாண்ட டெலிவரியா!

இத்தனை வாகனங்கள் டெலிவரியா!

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது 218 விங்கர் வாகனங்களை தற்போது மேற்கு வங்க மாநில அரசுக்கு டெலிவரி செய்துள்ளது. இது வேன் ரகத்தை சேர்ந்த வாகனம் ஆகும். மேற்கு வங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க மாநில அரசின் கால்நடை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்வபன் தீப்நாத் ஆகியோர், இந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேற்கு வங்க அரசின் கால்நடை மேம்பாட்டு துறைதான், இந்த விங்கர் வாகனங்கள் அனைத்தையும் பயன்படுத்தவுள்ளது.

சக்தி வாய்ந்த இன்ஜின் இருக்கு!

அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு பிறகுதான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த வாகனங்களை மேற்கு வங்க மாநில அரசு டெலிவரி பெற்றுள்ளது. டாடா விங்கர் வேனில் 2.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்டி-ரோல் பார்களுடன் தன்னிச்சையான முன்பக்க சஸ்பென்ஸன் மற்றும் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் டாடா விங்கர் வேன் பெற்றுள்ளது.

பல்க் ஆர்டர்! டாடா வண்டிகளை மொத்தமா வாங்கி போட்ட அரசு!ஒரே நேரத்துல இவ்ளோ பெரிய பிரம்மாண்ட டெலிவரியா!

மகிழ்ச்சி... மகிழ்ச்சி... ரொம்ப மகிழ்ச்சி!

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''மேற்கு வங்க மாநில அரசுக்கு 218 டாடா விங்கர் வேன்களை டெலிவரி செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் அம்மாநில அரசின் முயற்சிகளில் நாங்களும் ஒரு பகுதியாக இருப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு!

முன்னதாக மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகத்திடம் இருந்து, 1,180 எலெக்ட்ரிக் பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதவிர கர்நாடக மாநிலம் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து, 921 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரையும் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.

டாடா சாம்ராஜ்யம்!

எலெக்ட்ரிக் பஸ் உற்பத்தியில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மையான இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் கார் சந்தையில் 3 தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) ஆகும்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!

இந்த வரிசையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) மற்றும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Tata Altroz EV) ஆகியவை விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த இரண்டில் ஒரு எலெக்ட்ரிக் கார் (அனேகமாக டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்), நடப்பு 2023ம் ஆண்டு முடிவடைவதற்கு உள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Friday, February 10, 2023, 12:40 [IST]
English summary
Tata delivers 218 winger vans to west bengal government all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+