லியோ அப்டேட்டுக்காக தமிழகம் மட்டும்தான் காத்திருக்கு.. ஆனா அக்-17க்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்து கெடக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களாக சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டும் எஸ்யூவி ரக கார் மாடல்களாகும். இந்த இரண்டிற்கும் இந்திய எஸ்யூவி வாகன பிரியர்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த காரின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களை இந்தியாவில் வெளியீடு செய்தது, டாடா. சமீபத்திலேயே இந்த காரை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. அன்றைய தினத்தில் காரின் படங்கள், சிறப்பு வசதிகள் மற்றும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்பது போன்ற குறிப்பிட்ட சில முக்கிய தகவல்களை மட்டுமே அது பகிர்ந்துக் கொண்டது.

Facelift harrier and safari price announcement date

ஆனால், அதன் விலைகள் போன்ற பிற முக்கிய தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. ஏன் இப்போது வரை இந்த கார்கள் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பதுகூட யாரும் அறியாத ஒன்றாக உள்ளது. டாடா மோட்டார்ஸின் முதன்மை அதிகாரிகள் சிலருக்கு அது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது தெரியாத ஒன்றாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே டாடா அதிகாரப்பூர்வமாக இரு ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலையையும் இந்தியாவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு கார் மாடல்களின் விலையையும் டாடா விரைவில் அறிவிக்க இருக்கின்றது.

இதற்கான நாளாக வரும் 17 ஆம் தேதியை டாடா தேர்வுச் செய்திருக்கின்றது. ஆமாங்க, இந்த நாளிலேயே இரு புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களின் விலையையும் டாடா மோட்டார்ஸ் அறிவிக்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து அடுத்து ஒரு சில தினங்களில் அந்த கார்களின் டெலிவரி பணிகளைத் தொடங்கவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இரு ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களின் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் இதுவரை டாடாவிடம் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய வெளியீட்டு நிகழ்வின் வாயிலாக இந்த இரு கார்களையும் வேற லெவலுக்கு அது அப்கிரேட் செய்திருப்பது மட்டும் தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதேபோல் டாடா மோட்டார்ஸ் அதன் புகழ்பெற்ற கார் மாடலான நெக்ஸானை அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஏற்கனவே கவர்ச்சிக்கு பெயர்போன இந்த கார் மாடலுக்கு அது கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கியே தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

புதுப்பித்தலின் பேரில் இந்த தரமான வேலையை அது செய்திருக்கின்றது. இந்த காரை எந்த அளவிற்கு அழகானதாக அது மாற்றி இருக்கின்றதோ, அதைப்போலவே ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றையும் டாடா தற்போது அப்டேட் செய்திருக்கின்றது. சொல்லப்போனால் இந்த அனைத்து கார் மாடல்களும் (நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி) ஆகிய அனைத்தும் நிறுவனத்தின் கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவி அப்கிரேட் செய்திருக்கின்றன.

இதனாலேயே மிக மிக அழகிய கார்களாக அவை தற்போது மாறி இருக்கின்றன. ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டநிலையில், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவற்றிற்கு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இந்த இரு கார்களுக்கும் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

முழு நீள எல்இடி லைட் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் முன் மற்றும் பின் பக்கங்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த லைட்டே காரின் முகப்பு பகுதிக்கு மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்திருக்கின்றது. இதுதவிர, பெரிய அளவில் பான்னெட், கவர்ச்சியான க்ரில், பனி மின் விளக்கு மற்றும் ஆகியவையும் இந்த காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், இந்த கார்களின் பக்கவாட்டு பகுதிக்கு அழகு சேர்க்கும் விதமாக கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பம்சங்களைக் பொருத்த வரை, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை 12.3 அங்குலத்திலும், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நேவிகேஷன் வசதி உடனும் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், காரின் கேபினுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக பேக்லைட் லோகோ வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், லெதர் போர்த்தப்பட்ட டேஷ்போர்டு ஆகியவற்றையும் இந்த கார்கள் கொண்டிருக்கின்றன.

இதுதவிர, டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்கள், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 6-7 ஏர் பேக்குகள் போன்ற வசதிகளையும் இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது. ஆகையால், சிறப்பம்சங்கள் நிரப்பப்பட்ட வாகனங்களாகவும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்கள் காட்சியளிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு கார்களுக்கும் இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இரு கார்களின் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் லியோ அப்டேட்டின் மீது நிலவி வந்த எதிர்பார்ப்பையே தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 21:34 [IST]
English summary
Tata facelift harrier and safari price announcement date revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+