குடும்பத்தோட போக கார் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட்பண்ணுங்க! இந்த 2 கார் மரண மாஸா இருக்கும்!
டாடா நிறுவனத்தின் ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் டாடா நிறுவனம் தற்போது இந்த காரின் அறிமுகத்திற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. முற்றிலும் மாற்றப்பட்ட காராக இந்த கார் அறிமுகமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த காரை வாங்க தற்போது மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் டாடா நிறுவனம் தனது அடுத்த அறிமுகத்திற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

டாடா நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்புகளாக தனது ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் ஏற்கனவே இந்திய சாலைகளில் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த கார்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நுட்ப தகவல்கள்: இந்த கார்களின் இன்ஜினை பொருத்தவரை இரண்டு கார்களும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இரண்டு கார்களிலும் பழைய மாடலில் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 168 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் கியர் பாக்ஸை பொறுத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ்கள் இணைக்கப்படுகின்றன. இது சிறப்பான ஃபெர்பாமென்ஸை வழங்குகிறது.
இந்த கார்களில் ஏற்கனவே இருக்கும் இன்ஜின்களில் எந்தவித பிரச்சனையும் இல்லாததால் இதை மாற்ற வேண்டிய அவசியம் டாடா நிறுவனத்திற்கு ஏற்படவில்லை. தற்போது சர்வதேச அளவில் மாசு வெளியேற்றாத இன்ஜின்கள் தயாரிக்கப்படுவதால் டாடா நிறுவனம் தற்போது 1.5 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் வழங்குகிறது.
இது 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடியை கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த இன்ஜின் தயாரிக்கப்படும் தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது. இது இந்த காரில் பொருத்தப்படும் என்ற தகவல் இல்லை.
வெளிப்புற மாற்றங்கள்: இரு கார்களின் வெளிப்புறத் தோற்றம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக டாடா நிறுவனத்தின் கர்வ் கான்செப்ட் காரின் டிசைன் பல இன்ஸ்பயர் செய்யப்பட்டு இந்த இரு கார்களும் வெளிப்பட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பின்பக்க டெயில் லைட் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ஸ்பிளிட் ஹெட்லைட்டுகள், சிலிக்கான எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கமும் பின்பக்கமும் உள்ள பம்பர் டிசைன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய டிசைனில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உட்புற மாற்றம்: இந்த இரு கார்களிலும் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக சமீபத்தில் வெளியான நெக்ஸான் காரில் எப்படியான அப்டேட்கள் எல்லாம் செய்யப்பட்டதோ, அதேபோல இந்த காரிலும் அப்டேட் செய்யப்படுகிறது.முக்கியமாக இந்த காரின் உட்புறத்தில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்படுகிறது.
மேலும் டச்சை அடிப்படையாகக் கொண்ட எச்விஏசி கண்ட்ரோல்கள், மாடலான சொகுசான கேபின் வசதி இரண்டு ஸ்போக்ஸ் ஸ்டேரிங் வீல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் என பல அம்சங்கள் இந்த இரு கார்களிலும் இடம் பெற உள்ளன. இதனால் இந்த காரின் உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்: புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன. முக்கியமாக பேனரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 அடாஸ் சிஸ்டம், எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோ ஹைபீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆகிய அம்சஙகள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பு: டாடா நிறுவனத்தின் கார்களுக்கு பாதுகாப்பு குறித்து நாம் கேள்வி கேட்க வேண்டியது இல்லை. டாடா நிறுவனம் ஆரியர் மற்றும் சபாரிகளை சிறந்த பில்ட் குவாலிட்டியில் தயாரித்துள்ளனர். அதேபோல சிறந்த பாதுகாப்பான காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். பாதுகாப்பு விஷயத்தில் டாடா நிறுவனத்துடன் மஹிந்திரா நிறுவனமும் ஹுண்டாய் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இந்த ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் கார்களுக்கான டிசைன் அம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் மார்க்கெட்டுக்கு வந்தால் அதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








