லாரியே வந்து மோதுனாலும் அசால்டா நிற்கும்! இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இது தான்!
புதிதாக அறிமுகமாகியுள்ள டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்கள் இந்தியாவின் பாதுகாப்பான 10 கார்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த பட்டியல் வேறு என்னென்ன கார்கள் இருக்கிறது என விரிவாக காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் நேற்று தனது புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்று பாதுகாப்பான காராக அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த கார்கள் இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 பாதுகாப்பான கார்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.

டாடா ஹாரியர்: புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள டாட்டா ஹாரியர் கார் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாகவும் டாப் வேரியண்டில் 7 ஏர் பேக்கும் அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய உள்ளன. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 33.50 குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளையும் ஒட்டுமொத்தமாக 78.05 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
டாடா சஃபாரி கார்: டாடா நிறுவனம் தனது சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி உள்ளது. ஹாரியர் காரில் உள்ள அதே அம்சங்கள் இந்த காரிலும் இருக்கிறது. மேலும் இதில் மூன்று வரிசை கொண்ட எஸ்யூவி கார் என்பதால் இந்த கார் ரூபாய் 16.19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இதில் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், டிரைவர் அட்டென்ஷன் அலர்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எமர்ஜென்சி கால், பிரேக் டவுன் அலர்ட் ஆகிய இந்த காரில் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் : ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் கார் இந்தியாவில் குளோபல் என்கேப் கிராஷ்டெஸ்டில் 5 ஸ்டார்களை பெற்ற ஒரே செடான் காராக இருக்கிறது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 29. 71 புள்ளிகளையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 42 புள்ளிகளையும் பெற்று ஒட்டுமொத்தமாக 71.71 புள்ளிகளை பெற்ற பாதுகாப்பான காராக இருக்கிறது.
ஸ்கோடா ஸ்லாவியா: இந்த கார் ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் கார் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாராகிறது. இந்த காரிலும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. எவ்வளவு புள்ளிகளை பெற்றுள்ளதோ அதே புள்ளிகளை தான் இந்த ஸ்கோடா ஸ்லாவியா காரும் பெற்றுள்ளது. இந்த இரண்டு கார்களும் கடைசி அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக விற்பனையாகி வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன்: இந்தியாவில் பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த கார் குளோபல் என் கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. இந்த கார் பெரியவர்களுக்கான ரேட்டிங் மற்றும் சிறியவர்களுக்கான ரேட்டிங் என இரண்டிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 71.64 புள்ளிகளை பெற்று தற்போது மூன்றாவது பாதுகாப்பான காராக இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
ஸ்கோடா குஷாக்: இது போக்ஸ்வேகன் டைகுன் கார் உருவாகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த காரம் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் சேப்டி ரேட்டிங்கும் போக்ஸ்வேகன் டைகுன் காரின் சேப்டிக் ரேட்டிங்கும் ஒன்றாக தான் இருக்கிறது. இது யாரிலும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரே மாதிரியாக தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என்: மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். இந்த கார் பாதுகாப்பான கார்களின் பட்டியல் இருக்கிறது இந்த கார் 58.18 புள்ளிகளை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மூன்று ஸ்டார் ரேட்டிங் இந்த கார் பெற்றுள்ளது.
டாடா பஞ்ச்: டாடா நிறுவனத்தின் சிறிய ரகசியத்தை இந்தக் காரும் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த காரின் ரேட்டின் எஸ்யூவி 700 கார் ரேட்டிங்க்கு சமமாக உள்ளது இந்த கார் ஒட்டுமொத்தமாக 57.34 புள்ளிகளை பெற்று இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் பட்டியலில் ஒன்றாக இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300: இந்தப் பட்டியலில் உள்ள மூன்றாவது மஹிந்திரா எக்ஸ்யூவி கார் இது. இந்த கார் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கார் 53.86 புள்ளிகளை பெற்று பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் தற்போது விலை குறைந்த காரை விட பாதுகாப்பான கார் தான் முக்கியம் என்ற மனநிலை வந்துவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் பெருகிவரும் விபத்துகளும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறித்து செய்திகள் வெளியாவதால் மக்களுக்கு விபத்து குறித்த பயம் வந்துவிட்டது. இதனால் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களில் விற்பனை சிறப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








