மஹிந்திரா காரில் தேடினாலும் கிடைக்காது!! டாடா மோட்டார்ஸ் நமக்காக வழங்கியுள்ள 8 அற்புதமான வசதிகள்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2023 ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கிடைக்காத சில அம்சங்கள் இந்த டாடா கார்களில் வழங்கப்பட்டுள்ளன.
பெரிய டச் ஸ்க்ரீன்: எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் 10.25 இன்ச்சில் ஒன்றாக இணைக்கப்பட்ட இரு திரைகள் வழங்கப்படுகின்றன. 2021இல் எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த திரைகள் பிரபலமாக பார்க்கப்பட்டன. ஆனால், அதன்பின் பல்வேறு கார்கள் இந்த அம்சத்துடன் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, 2023 டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் அளவில் சற்று பெரியதாக 12.3 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளன.

வெண்டிலேட்டட் இருக்கைகள்: ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி இந்த டாடா மற்றும் மஹிந்திரா கார் அனைத்திலும் உள்ளது. ஆனால், டாடாவின் மாடர்ன் ஹெரியர் & சஃபாரி கார்கள் மட்டும் கூடுதலாக முன் இருக்கை பயணிகளுக்காக வெண்டிலேட்டட் இருக்கைகளை பெறுகின்றன. தேவைக்கேற்ப காற்றை வெளியிடக்கூடியவை வெண்டிலேட்டட் இருக்கைகள் ஆகும். 2023 சஃபாரி காரின் 6-சீட்டர் வேரியண்ட்கள் இந்த இருக்கைகளை 2வது வரிசையிலும் கொண்டுள்ளன.
2வது வரிசை கேப்டன் இருக்கைகள்: கூடுதல் லெக் ரூம் இடவசதி உடன் கூடுதல் சவுகரியமாக இருப்பவையே கேப்டன் இருக்கைகள் ஆகும். 2023 டாடா சஃபாரி காரின் 6 சீட்டர் வேரியண்ட்களில் 2வது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கைகள் கிடைக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 6-சீட்டர் ஆப்ஷனில் கிடைப்பதில்லை. ஆதலால், கேப்டன் இருக்கைகளும் அந்த காரில் கிடைப்பதில்லை.

பவர்டு டெயில்கேட்: இந்த வசதி தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்படுகின்றது. இருப்பினும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கிடைப்பதில்லை. இந்த அம்சம் உள்ள கார்களில், காருக்கு பின்னால் இருக்கும் பூட் ஸ்பேஸ் கதவை திறக்க சைகை செய்தாலே போதும். பொதுவாக இந்த சைகை ஆனது கால்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சென்சாரின் முன் அசைத்து காட்டினால் பூட் ஸ்பேஸ் கதவு திறக்கக்கூடியதாக உள்ளது.
4 வழிகளில் எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பயணிக்கான முன் இருக்கை: ஓட்டுபவரின் சவுகரியம் மிக முக்கியம் என்பதால், கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் டிரைவர் இருக்கையை மடக்கும் வசதி கொடுக்கப்படுகிறது. ஆனால் மிகவும் சில கார்களில் மட்டுமே டிரைவருக்கு அருகே அமரும் முன் இருக்கை பயணிக்கான இருக்கையும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக வழங்கப்படுகிறது. அந்த சில கார்களுள், 2023 ஹெரியர் & சஃபாரியும் ஒன்றாகும்.

பெடில் ஷிஃப்டர்கள்: மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை போல் டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைப்பதில்லை. டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த குறையை சரிச்செய்யும் விதமாக பெடில் ஷிஃப்டர்கள் இந்த டாடா கார்களில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கிறது.
19-இன்ச் அலாய் சக்கரங்கள்: டாடா ஹெரியர், சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 இந்த 3 எஸ்யூவி கார்களிலும் அலாய் சக்கரங்கள் 17 மற்றும் 18 இன்ச் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ஆனால், 2023 ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் மட்டும் 19-இன்ச் அலாய் சக்கரங்கள் ஆப்ஷனை டாடா மோட்டார்ஸ் புதியதாக வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஆப்ஷன் சக்கரங்களை ஹெரியர் & சஃபாரி கார்களில் குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டுமே பெற முடிகிறது.

ஆட்டோ டிம்மிங் IRVM: இரவு நேர பயணங்களின் போது பயன்படக்கூடிய அம்சம். பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒளி காருக்குள் டிரைவர் பார்ப்பதற்காக இருக்கும் IRVM-இல் எதிரொலிக்கக் கூடாது என்பதற்காக ஆட்டோ டிம்மிங் வசதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், டிரைவரின் கண்கள் கூசுவதை தடுக்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, கார்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மெல்ல மெல்ல அனைத்து விஷயங்களிலும் வளர்ச்சி அடைந்து வருவது வழக்கம். கடந்த நூறு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை அவ்வாறுதான் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆதலால், இதன்பின் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அப்டேட் செய்யப்பட்டால் மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் பெறலாம். ஆனால், அதற்குள் டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் மேலும் அப்டேட் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications









