தரமான செய்கை! சோப்பு டப்பாக்களை விக்கறவங்களுக்கு டாடா குடுத்த அதிர்ச்சி! இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை!
இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). பாதுகாப்பான கார்களை (Safest Cars) தயாரித்து விற்பனை செய்து வருவதால், டாடா கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3 கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் (Crash Test) முழுமையாக 5 ஸ்டார் (5 Star) பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. அவை டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவை ஆகும்.

இதுதவிர டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகியவை 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னணி கார்களாக இருந்து வரும் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களின் பாதுகாப்பு ரேட்டிங் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்திய சந்தையில் டாடா ஹாரியர் கார் கடந்த 2019ம் ஆண்டில் இருந்தும், டாடா சஃபாரி கார் கடந்த 2021ம் ஆண்டில் இருந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளுக்கு இந்த 2 கார்களும் அனுப்பி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் இன்று (அக்டோபர் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளுக்கு அனுப்பியிருந்த நிலையில், அவற்றின் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன.
இதில் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுமே முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த 2 கார்களும், 34க்கு 33.05 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளன. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த 2 கார்களும், 49க்கு 45 புள்ளிகளை ஸ்கோர் செய்திருக்கின்றன.
இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவுகளிலும் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்கள், முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதன் மூலம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய டாடா கார்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இனி டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சிறப்பான வகையில் உயரலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதற்கு ஒரு காரணம் என்றால், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியிருப்பது மற்றொரு காரணம்.


Click it and Unblock the Notifications








