இந்திய மக்களின் ரொம்ப நாள் கனவை நிறைவேத்த போகும் டாடா! கலக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

அப்டேட் செய்யப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய நிலையில் இந்த 2 எஸ்யூவிக்களும், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன.

எனினும் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் கனவு நிறைவேற போகிறது.

Tata Safari Facelift

நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ திருவிழா நடைபெற்றது. இதில் புத்தம் புதிய 1.5 லிட்டர் TGDi நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இது 168 பிஹெச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது ஆகும்.

இந்த இன்ஜின்தான், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Harrier Facelift

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மூலம், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் ஆரம்ப விலை குறையும் என்பதுதான். தற்போதைய நிலையில் டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 16.19 லட்ச ரூபாயாக உள்ளது. டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் போட்டி மாடல்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களான மஹிந்திரா (Mahindra), எம்ஜி (MG) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகியவை தங்கள் கார்களில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. மறுபக்கம் ஹூண்டாய் அல்கஸார் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், அது டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இந்த கார்களில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வேண்டும் என்பது வாடிக்கையாளர்கள் பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 18, 2023, 23:58 [IST]
English summary
Tata harrier safari to get 1 5l turbo petrol engine new details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+