நாய்க்காக பார்த்து பல லட்ச ரூபா காரை பறிகொடுத்த நபர்... இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா!..
தெரு நாய்களை அடித்தே கொள்ளும் நபர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஓர் நபர் நாய்க்காக பார்த்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை ஓர் நபர் இழந்து இருக்கின்றார். இந்த விநோத நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தெரு நாய்களை மிகப் பெரிய தொந்தரவாகவே வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர். இதற்கேற்ப அவையும் சாலையில் அங்கும், இங்குமாக திரிந்த வண்ணமே இருக்கின்றன. பெரும்பாலும் அவை உணவிற்காகவே சாலையில் சுற்றி திரிந்தவாறு இருக்கின்றன. இந்த நேரத்திலேயே அவை அதிகளவில் வாகனங்களில் சிக்கி இறக்க நேரிடுகின்றன.

சில நேரங்களில் நாய்களால் மிகப் பெரிய விபத்துகள்கூட அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையிலான ஓர் விபத்து சம்பவே தற்போது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான குர்கான்-ஃபரிதாபாத் நெடுஞ்சாலையில் அரங்கேறி இருக்கின்றது. நாய் ஒன்று குறுக்கே வந்த காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாய்மீது ஏற்றிவிடக் கூடாது என்பதற்காக காரை ஓட்டி வந்த நபர் அதனை வேறு பக்கத்திற்கு திருப்பி இருக்கின்றார். அப்போது முழுமையாக கன்ட்ரோல் இழந்ததனால் அந்த கார் மிக மோசமாக விபத்தைச் சந்தித்து நேரிட்டிருக்கின்றது. சாலையின் டிவைடரில் மோதி காரின் முகப்பு பகுதி மற்றும் இடது பக்கம் முழுவதுமாக சிதிலமடைந்திருக்கின்றது.
இந்த நிலையிலும் அக்காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார். குறிப்பாக, தூசியை தட்டிவிட்டு அவர் வெளியேறியது மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அவர் சிறிதும் காயமின்றி பாதுகாப்பாக வெளியேறியதற்கு அந்த காரின் அதிக உறுதித் தன்மையே மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
அந்த நபர் ஓட்டி வந்தது பாதுகாப்புக்கு பெயர்போன டாடா ஹாரியர் காராகும். அந்த காரே அவரின் உயிரையே பாதுகாத்திருக்கின்றது. காரில் ஒருவர் மட்டுமே வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், இந்த விபத்தில் வேறு யாருக்கும் எந்த பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிகின்றது. டாடா ஹாரியர் கார் இதுபோன்று விபத்துகளில் சிறப்பாக செயல்படுவது முதல் முறையல்ல.
சமீபத்தில்கூட இதே கார் மாடல் ஓர் மிகப் பெரிய விபத்தில் சிக்கியது. அந்த விபத்திலும் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பையே அந்த கார் வழங்கியது. தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விபத்து சம்பவத்தைக் காட்டிலும் மிக மோசமான விபத்து நிகழ்வு அதுவாகும். இதுவரை இந்த காரை எந்த மோதல் ஆய்வு அமைப்பும் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தவில்லை.
ஒருவேளை அந்த கார் மோதல் ஆய்விற்கு உட்படுத்தினாலும் அதிக ஸ்டார் ரேட்டிங்கையே பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைகூட டாடா ஹாரியர் எஸ்யூவி கார் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போதைய விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இத்தகைய திறனையும், மிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விற்பனைக்கு வந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றநிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக டாடா ஹாரியர் கார்கள் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன.
ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 24.07 லட்சம் வரையிலான விலையிலேயே இந்த கார் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் ஆடம்பர வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் (Advanced Driver Assistant System) இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது.
இந்த அம்சம் வாயிலாக பிரேக் பிடித்தல், பிளைண்ட் ஸ்பாட்டுகளை கண்டறிதல், கதவுகள் திறக்கும்போது எச்சரித்தல், பின் பக்கத்தில் இருந்து வாகனங்கள் கிராஷ் செய்யும்போது எச்சரித்தல், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் மாறுவது குறித்து எச்சரிக்கை வழங்குதல், ஃபார்வார்டு கொல்லிசன் வார்னிங், ரியர் கொல்லிசன் வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் சைன் போர்டை கண்டறியும் வசதி என பல வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, 6 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டிபிள் டிரைவ் மோட், பிரேக் டிஸ்க் வைப்பிங் கருவி, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரோல் ஓவர் மிடிகேஷன், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஹாரியர் எஸ்யூவியில் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே அது எப்பேர்பட்ட விபத்தாக இருந்தாலும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை அதனால் தர முடிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போதைய விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த ஹாரியர் கார் பயனர்களையும் பெருமையடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க கருத்து: இந்தியாவில் நாய்களை மதிப்பவர்கள் மிக மிக குறைவே. சாலையில் அவை இருப்பது தெரிந்தாலும் வேகத்தை குறைப்பதே இல்லை. இவ்வாறு ஒரு சிலர் செயல்படுவதன் காரணத்தினாலேயே அதிகளவில் சாலையில் நாய்கள் இறக்கின்றன. இந்த மாதிரியானோர் நாட்டில் அதிகளவில் இருக்கின்றநிலையில் இந்த டாடா ஹாரியர் கார் உரிமையாளர் மத்த உயிர்களுக்கும் மதிப்பளிப்பவராக தெரிகின்றனர். அவரின் இந்த செயல் மனிதம் இப்போதும் உயிருடன் இருக்கிறது என்பதை தெரியப்படுத்துகின்றது.


Click it and Unblock the Notifications








