சைலண்டா சம்பவத்தை செய்த டாடா கார்... காரை வாங்க கூட்டம் கூட்டமா ஆட்கள் வந்திருப்பாங்க போலிருக்கே..
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக ஹாரியர் (Harrier) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடலாகும். இந்த காரே இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா நிறுவனம் இந்த காரை விற்பனைக்கு களமிறக்கிய முதல் நாளில் இருந்து இப்போது வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையாகி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளனன. இது உண்மையில் மிகப் பெரிய விற்பனை எண்ணிக்கை ஆகும். இந்த கார் மாடலை டாடா நிறுவனம் முதன் முதலில் 2019 ஜனவரி மாதத்திலேயே விற்பனைக்குக் களமிறக்கியது.

விற்பனைக்கு வந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றநிலையில் இந்த பிரமாண்ட விற்பனை எண்ணிக்கையை ஹாரியர் பெற்றிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் அதன் ஒமெகா-ஆர்க் பிளாட்பாரத்தில் வைத்தே இந்த காரை உருவாக்கி இருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் டாடா கார் மாடலே ஹாரியர்தான்.
இதன் டி8 பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே ஜாகுவார் லேண்ட் ரோவர் எஸ்யூவி கார்கள் சில உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி கார் மாடல் இந்த பிளாட்பாரத்திலேயே தயாரிக்கப்படுகின்றது. இதனால்தான் டாடா ஹாரியர் எஸ்யூவி, லேண்ட் ரோவர் எஸ்யூவி கார்களைபோல மிகவும் கவர்ச்சியான ஓர் வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

டாடா நிறுவனம் எஸ்யூவி காரை ஃப்ரெஷ் மாடலாக இந்தியாவில் எப்போதும் வைத்துக் கொள்ளும் விதமாக அவ்வப்போது அதில் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும், சிறப்பு பதிப்புகளையும் விற்பனைக்குக் களமிறக்கியது. டாடாவின் இந்த யுக்தியும் அந்த காரின் அதிக எண்ணிக்கை விற்பனைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.
தற்போதைய நிலவரப்படி டார்க் எடிசன், கேமோ எடிசன் மற்றும் ரெட் டார்க் எடிசன் என பன்முக சிறப்பு பதிப்புகளை ஹாரியர் காரில் டாடா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, இந்த 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் 19 விதமான தேர்வுகளையும் டாடா வழங்குகின்றது.
இதன் ஆரம்ப விலை ரூ. 15 லட்சம் ஆகும். உச்சபட்ச விலை ரூ. 24.07 லட்சமாக இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் ஆடம்பர வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றையும் டாடா மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.

குறிப்பாக, பாதுகாப்பு விஷயத்தில் சற்றும் சமரசம் இல்லாத வாகனமாக அது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதியான அடாஸ் (Advanced Driver Assistant System) சிஸ்டத்தை ஹாரியர் காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்த ஒற்றை அம்சத்தின் வாயிலாக பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சத்தை ஹாரியர் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
அவசர காலத்தில் தானாகவே பிரேக் பிடித்தல், பிளைண்ட் ஸ்பாட்டுகளை கண்டறிதல், கதவுகள் திறப்பதை அலர்டு செய்யும் வசதி, பின் பக்கத்தில் இருந்து வாகனங்கள் கிராஷ் செய்யும்போது எச்சரிக்கை வழங்கும் வசதி, லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் மாறுவது குறித்து எச்சரிக்கை வழங்குதல், ஃபார்வார்டு கொல்லிசன் வார்னிங், ரியர் கொல்லிசன் வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் சைன் போர்டை கண்டறியும் வசதி என ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, 6 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டிபிள் டிரைவ் மோட், பிரேக் டிஸ்க் வைப்பிங் கருவி, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரோல் ஓவர் மிடிகேஷன், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஹாரியர் எஸ்யூவியில் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க நவீன கால தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, குரல் கட்டளை ஏற்றல், ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர 7 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே பார்த்ததுபோல எக்கசக்க வசதிகளை ஹாரியர் காரில் டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. இவை அனைத்துமே இந்த காரை 4 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை எண்ணிக்கையை எட்டுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க இந்த காரின் பவர்ஃபுல் எஞ்ஜினும் அதன் அதிக விற்பனைக்கு காரணமாக இருக்கின்றது.
2.0 லிட்டர் கைரோடெக் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே ஹாரியர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றன. இதே எஞ்ஜினே டாடாவின் சஃபாரி கார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் கவர்ச்சிகரமான எஸ்யூவி கார் மாடலாக ஹாரியர் இருக்கின்றது. இதன் அழகான தோற்றம் மற்றும் பாதுகாப்பு வசதிகளே இந்த காரின் அதிக சேல்ஸ் எண்ணிக்கை மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இதுதவிர, டாடா மீது இருக்கும் நம்பிக்கையும் இந்த காரின் அமோக விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









