டாடா இண்டிகாவில் 3 லட்ச கிமீ... நெக்ஸானில் 2 லட்ச கிமீ... கொடுத்த காசு வீணா போகல - கஸ்டமர் செம்ம ஹாப்பி!!

டாடா இண்டிகா (Tata Indica) காரை கிட்டத்தட்ட 3 லட்ச கிமீ தொலைவிற்கு பயன்படுத்திய நபர், அதன்பின் டாடா நெக்ஸான் (Tata Nexon) காரையும் 2 லட்ச கிமீ தொலைவிற்கு பயன்படுத்தி அசத்தி உள்ளார். இதுகுறித்து அந்த நபர் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கமர்ஷியல் வாகனங்களில் கொடிக்கட்டி பறந்துவந்த டாடா குழுமம் முதன்முதலாக பயணிகள் கார்கள் சந்தையில் நுழைந்த போது அறிமுகப்படுத்திய கார் இண்டிகா ஆகும். விற்பனையில் சக்கை போடு போட்ட இந்த ஹேட்ச்பேக் காரை இப்போதும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இண்டிகா காரை வி2 டர்போ டீசல் என்ஜின் உடன் ஆற்றல்மிக்க வெர்சனிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்தது.

tata nexon owner completes 2 lakh km

இந்த ஆற்றல்மிக்க இண்டிகா வி2 டர்போ டீசல் காரை கிட்டத்தட்ட சுமார் 3 லட்ச கிமீ தொலைவிற்கு யாஷ் வெர்மா என்பவர் பயன்படுத்தி உள்ளார் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியானது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த நபர் அதன்பின் டாடா நெக்ஸான் கார் ஒன்றையும் வாங்கினார். இந்தியாவில் டாடா நெக்ஸான் கார் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது வாங்கிய முதல் வாடிக்கையாளர்களுள் ஒருவர் இந்த யாஷ் வெர்மா ஆவார்.

இந்த நிலையில் தற்போது, தனது நெக்ஸான் கார் 2 இலட்ச கிமீ தொலைவு இயக்கத்தை கடந்துள்ளதாக யாஷ் வெர்மா புதியதொரு வீடியோவை யுடியூப்பில் பதிவிட்டுள்ளார். யாஷ் வெர்மாவின் நெக்ஸான் காரின் ஓடோ மீட்டர் 1,99,999 கிமீ-இல் இருந்து 2 இலட்ச கிமீ-க்கு மாறுவதை காட்டும் அந்த வீடியோவை கீழே காணலாம். ஏற்கனவே கூறியதுபோல், 2017இல் டாடா நெக்ஸான் கார் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது நெக்ஸானை வாங்கியவர்களுள் ஒருவர், யாஷ் வெர்மா.

அதன்பின் ஒரு வருடத்திற்கு உள்ளாக யாஷ் வெர்மாவின் நெக்ஸான் கார் 24,000 கிமீ தொலைவை கடந்தது. இதனையும் அந்த சமயத்தில் வீடியோவின் மூலமாக யாஷ் வெர்மா தெரிவித்து இருந்தார். இண்டிகா வி2 டர்போ டீசல் காரை 7 வருடங்களில் 3 லட்ச கிமீ தொலைவிற்கு இயக்கி உள்ள யாஷ் வெர்மா, ஏசியை பயன்படுத்தவில்லை எனில் தனது இண்டிகா கார் லிட்டருக்கு 18கிமீ மைலேஜை வழங்குவதாக கூறுகிறார்.

tata nexon owner completes 2 lakh km

இந்த அளவிற்கான சிறந்த மைலேஜுக்கு முக்கிய காரணம், டீசல் என்ஜின்களின் நீடித்து உழைக்கும் தன்மை ஆகும். பொதுவாகவே, டீசல் என்ஜின்கள் 2.5 லட்ச கிமீ - 3 லட்ச கிமீ தொலைவிற்கு எந்தவொரு பிரச்சனையும் இன்றி இயங்குகின்றன. முறையாக பராமரித்தால், இதனை காட்டிலும் அதிக மைலேஜை பெற முடியும். இதனாலேயே பெட்ரோல் கார்களை காட்டிலும், டீசல் கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருக்கின்றன.

நெக்ஸான் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். தற்சமயம், இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் காராக விளங்கும் நெக்ஸானில் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார் வாங்குவதை காட்டிலும், அதனை முறையாக பராமரித்தால் நீண்ட காலத்திற்கு காரை பிரச்சனை இன்றி பயன்படுத்த முடியும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக யாஷ் வெர்மா விளங்குகிறார். அதேநேரம், டாடா கார்களின் தரமும் யாஷ் வெர்மாவின் வாயிலாக அவ்வப்போது அவரது வீடியோவின் மூலம் வெளிப்படுகிறது. நெக்ஸான் காரில் 6 வருடங்களில் 2 லட்ச கிமீ தொலைவை இவர் கடந்திருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும்.

Article Published On: Tuesday, May 2, 2023, 14:57 [IST]
English summary
Tata indica car owner completed more than 2 lakh km in nexon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+