கருப்பு கலர் காதலர்களுக்காகவே டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிசன் கார்கள் களம் இறங்கியது!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று தனது நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் டார்க் எடிசன் காரை இந்திய சந்தைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டில் விஷூவல் அப்டேட் மட்டுமல்லாமல் சில புதிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. முக்கிய அம்சமாக இந்த காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்புற மாற்றத்தை பொருத்தவரை கார்னிலியன் ரெட் ஹைலைட் வழங்கப்பட்டுள்ளது. காரின் நிறத்தைப் பொருத்தவரை ஓப்ரான் பிளாக் நிறம் வழங்கப்பட்டுள்ளது. கிரில் பகுதியில் பியானோ பிளாக் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸிர்கார் ரெட் ஆக்ஸ்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

18 இன்ச் சார்கோல் பிளாக் நிற அலாய் வீல் மற்றும் காண்ட்ராஸ்ட் ரெட் கேலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஃபென்டரில் டார்க் லோகோவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் பிஎஸ்6 இரண்டாம் கட்ட மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்குத் தகுந்தார் போல மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் இ20 பெட்ரோலையும் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் டார்க் எடிசனிற்கான புக்கிங் தற்போது டாடா மோட்டார்ஸ் டீலர் ஷிப்களில் துவங்கியுள்ளது. ரூ30 ஆயிரத்தை முன்பணமாகச் செலுத்தி இந்த காரை புக்கிங் செய்யலாம். மேலும் தற்போது இந்த காரின் அடிப்படை மாடல் மற்றும் டார்க் எடிசன் மாடலுக்கான விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.
| Models | DARK Edition Price |
| Nexon (Petrol) | ₹12.35 Lakh |
| Nexon (Diesel) | ₹13.70 Lakh |
| Harrier (Diesel) | ₹21.77 Lakh |
| Safari 7S (Diesel) | ₹22.61 Lakh |
| Safari 6S (Diesel) | ₹22.71 Lakh |

இது போல சஃபாரி காரின் 7 சீட்டர் டீசலர் வெர்ஷன் காரின் அடிப்படை விலை ரூ15.65 லட்சம் எனவும், டார்க் எடிசன் விலை ரூ22.61 லட்சம் எனவும், 6 சீட்டர் டீசல் வெர்ஷனின் அடிப்படை விலை ரூ22.26 லட்சம் எனவும், டார்க் எடிசன் ரூ22.71 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த டார்க் எடிசன் கார்களில் சீட்கள் கார்னிலியன் ரெட் லெதர் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புற கிராப் ஹேண்டில், சென்டர் கன்சோல் அதே தீமில் வழங்கப்பட்டுள்ளது. சீட்களில் ஹெட்ரெஸ்ட்களில் டார்க் லோகோ வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு ஸ்டீல் பிளாக் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிரிங் வீல், கன்சோல், டோர்களில் பியானோ பிளாக் ஆக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் மொத்தம் 6 மொழிகளில் 200 வாய்ஸ் கமெண்ட்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. டிரைவர் சீட் 6 வே மெமரி ஃபங்சன் சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக 360 டிகிரி கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 7இன்ச் டிஎஃப்டி கிளஸ்டர், 10.25 இன்ச் ஹார்மேன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய யூஐ ஆகியன வழங்கப்பட்டுள்ளது.சஃபாரி காரில் 4 வழி பவர்டு மற்றும் எலெக்ட்ரானிக் பாஸ் மோடு உடன் கூடிய முன்பக்க சீட், மூடு லைட்டிங் உடன் கூடிய மெஜெஸ்டிக் சன்ரூப் இந்த காரில் உள்ளது.

இந்த கார் வெளிப்புறத்தில் ஓப்பிரியான் பிளாக் நிறத்தில் இருக்கிறது. ஸிர்கார் ரெட் நிறம் இன்செர்ட்களாக வழங்கப்பட்டுள்ளன. ஃபென்டரில் டார்க் லோகோ, 16இன்ச் பிளாக்ஸ்டோன் அலாய் வீல், கார்னிலியான் ரெட் நிறத்தில் உட்புற கட்டமைப்பு, லெதர் சீட்கள், ஸ்டீல் பிளாக் முன்பக்க டேஷ்போர்டு டிசைன், மற்றும் ரெட் ஆக்ஸென்ட் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் இந்த காரில் உள்ள முக்கிய அப்டேட்களாக இருக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









