ரொம்ப அதிக விலையை நிர்ணயிப்பாங்கனு நினைச்சோம்... ஆனா இதுதான் விலையா! ஷோரூம்ல கூட்டம் குவிய போகுது!
டாடா (Tata Motors) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றே நெக்ஸான் (Nexon) ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 8 லட்சத்து 9 ஆயிரத்து 990 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை தேர்வின் விலையோ ரூ. 13 லட்சமாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், ப்யூல், கிரியேட்டீவ், கிரியேட்டீவ் பிளஸ், ஃபியர்லெஸ் மற்றும் பியர்லெஸ் பிளஸ் ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. 1.2 லிட்டர் டர்போசார்ஜட் ரெவட்ரோன் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 டர்போசார்ஜட் ரெவோடார்க் டீசல் எஞ்ஜின் தேர்வுகளே ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானில் வழங்கப்படுகின்றது. மேலும், ஆறு விதமான நிற தேர்வுகளும் புதிய நெக்ஸானில் வழங்கப்படுகின்றது.
இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே மிகவும் கவர்ச்சிகரமான காராக உருவாகி இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
நிறுவனத்தின் பிரபல கான்செப்ட் கார் மாடலான கர்வ் (தற்போது அசுரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிின்றன), இதை தழுவியே டாடா மோட்டார்ஸ் நெக்ஸானை அப்கிரேட் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனாலேயே புதிய நெக்ஸான் வேற லெவல் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக தற்போது உருவெடுத்திருக்கின்றது.
வெளிப் பக்கம் மற்றும் உட்பக்கம் என அனைத்தும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய கிரில், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட பம்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல்-கள், ஸ்பிளிட் வகை ஹெட்லேம்ப் மற்றும் ஏர் டேம் என ஏகப்பட்ட அம்சங்கள் புதிதாக புதிய நெக்ஸானில் புகுத்தப்பட்டு இருக்கின்றன.
இது மட்டுமில்லைங்க, ரூஃப் ரெயில்கள், கருப்பு நிற பி பில்லர்கள், புதிய ஏரோ இன்செர்ட்டுகள் கொண்ட அலாய் வீல்கள், y வடிவ டெயில் லைட் ஆகியவையும் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அந்த மெல்லிய எல்இடி லைட் பகல் மற்றும் இரவு எப்போதும் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, இந்த டேடைம் லைட், எக்ஸ் ஃபேக்டர் மற்றும் டெயில் லைட் ஆகியவற்றில் வெல்கம் மற்றும் குட் பை ஆகியவற்றை சொல்லும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தை பழைய நெக்ஸானில் பார்க்க முடியாது. இத்துடன், நீளமான ஸ்பாய்ளர், பின் பக்கத்தில் வைப்பர் ஆகியவையும் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்தையும் பலமடங்கு மாற்றியிருக்கின்றது, டாடா. புதிய நெக்ஸானில் 3 டோன் டேஷ்போர்டு, லெதர் மிட் பேட்கள், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 2 ஸ்போக்குகள் கொண்ட பிஜிட்டல் ஸ்டியரிங் வீல் (இதிலேயே டாடாவின் டிஜிட்டல் லோகோவும் இடம் பெற்றிருக்கும்) என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டும்தான் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்கள் என நினைத்து எண்டு கார்டு போட்டு விட வேண்டும். இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், வாய்ஸ் அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், மெல்லிய மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதே இந்த திரை ஆகும்.
இத்துடன், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஐஆர்ஏ 2.0 கார் இணைப்பு வசதி, ரிமோட் கார் ஸ்டார்ட்/ஸ்டாப், நேவிகேஷன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொழில்நுட்ப வசதிகளைப் போலவே பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் நம்மை மிரட்டும் வகையில் இருக்கின்றது.
ஆமாங்க, அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்டு போட்டு இருக்கா இல்லையா என்பதைக் கண்டறியும் வசதிக் கொண்ட 3 பாயிண்ட் ரியர் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இது தவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சரவுண்ட் வியூவ் சிஸ்டம், முன் பக்க பார்க்கிங் சென்சார், பிளைண்ட் வியூவ் மானிட்டர் மற்றும் அவசர கால அழைப்பு வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆகையால், பாதுகாப்பு விஷயத்தில் பழைய நெக்ஸானைக் காட்டிலும் புதிய நெக்ஸான் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பழைய நெக்ஸான் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திறனுக்கே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் இப்போது விற்பனைகக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஆகையால், விற்பனையில் பழைய நெக்ஸானைப் போலவே இதுவும் சக்கைப்போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் கவர்ச்சியான தோற்றத்திற்கு இந்தியர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








