இந்த டாடா காரைதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு வாங்கறாங்க! ஒரே மாசத்துல இவ்ளோ பேர் வாங்கீட்டாங்களா!

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சூழலில் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்திற்கான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாடல் வாரியான சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12,259 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 13,914 ஆக உயர்ந்துள்ளது. இது 14 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்த டாடா காரைதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு வாங்கறாங்க! ஒரே மாசத்துல இவ்ளோ பேர் வாங்கீட்டாங்களா!

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,592 ஆக இருந்த டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 11,169 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ (Tata Tiago), 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,489 ஆக இருந்த டாடா டியாகோ விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 7,457 ஆக உயர்ந்துள்ளது.

இது 66 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ததுடன், அதன் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார், 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த டாடா காரைதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு வாங்கறாங்க! ஒரே மாசத்துல இவ்ளோ பேர் வாங்கீட்டாங்களா!

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5,011 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 3,955 ஆக குறைந்துள்ளது. இது 21 சதவீத வீழ்ச்சியாகும். இருப்பினும் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி மற்றும் ரேசர் என 2 புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இவை இரண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, டாடா அல்ட்ராஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா டிகோர் (Tata Tigor) கார் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,091 ஆக இருந்த டாடா டிகோர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 3,064 ஆக குறைந்துள்ளது. இது 25 சதவீத வீழ்ச்சியாகும்.

இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) கார்கள் முறையே 6வது மற்றும் 7வது இடங்களை பிடித்துள்ளன. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,619 ஆக இருந்த டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,054 ஆக குறைந்துள்ளது. இது 22 சதவீத வீழ்ச்சியாகும்.

அதேபோல் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,919 ஆக இருந்த டாடா சஃபாரி காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,252 ஆக குறைந்துள்ளது. இது 35 சதவீத வீழ்ச்சியாகும்.டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து கொள்வதற்காக வரும் மாதங்களில் அல்ட்ராஸ் சிஎன்ஜி, ரேசர் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்கள் மட்டுமல்லாது, பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 13, 2023, 8:34 [IST]
English summary
Tata model wise sales february 2023 nexon leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+