டாடா எடுக்கப்போகும் அதிரடி முடிவு! இனி மாருதி, மஹிந்திரா எல்லாம் என்ன செய்யப்போறாங்களோ?
டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய பிரத்தியேகமாக தனி ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா நிறுவனம் இருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் மெல்ல மெல்ல இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டூவீலர் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிட்டது. அடுத்ததாக எலெக்ட்ரிக் பைக் விற்பனையை அதிகரிக்கும் முடிவில் பல நிறுவனங்கள் இறங்கி வருகின்றன.

இதற்கிடையில் எலெக்ட்ரிக் கார்களும் வரிசையாக அறிமுகம் ஆகிக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் டாடா நிறுவனம் தான் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா நிறுவனம் மொத்தம் 19,000 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை டயர் 2மற்றும் டயர்3 சிட்டிகளுக்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா கூறும் போது: "டாடா நிறுவனத்தில் டியாகோ இவி கார் தான் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. தற்போது வரை மொத்தம் விற்பனையாகும் இவி காரில் 49 சதவீதம் இந்தியாவில் உள்ள டாப் 20 சிட்டிகளில் தான் இருக்கிறது.
இதனால் இந்த விற்பனையை இனி மைக்ரோ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். இதனால் இனி பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கான தனி ஷோரூம் மற்றும் இவி வாகனங்களுக்கான தனி ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் ஆகியவற்றை நிறுவ முடிவு செய்துள்ளோம். இதனால் விற்பனை அதிகரிக்கும் என கருதுகிறோம்.

முக்கியமான நகரங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் விற்பனை மற்றும் சர்வீஸ் வரும்போது அதற்கான தனியான ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை திறக்க வாய்ப்புகளை யோசித்து அதற்கேற்ற முடிவுகளை எடுப்போம். இதனால் வாடிக்கையார்களுக்கு சுலபமாக இருக்கும். விரைவாகவும் சேவைகளை பெற முடியும்."என தெரிவித்தார்.
இதனால் இந்தியா முழுவதும் டாடா நிறுவனம் இவி வாகனங்களுக்கான பிரத்தியேக ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை திறக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த சில மாதங்களில் வெளியாககூடும். இந்த செய்தி தற்போது டாடா இ வி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
டாடா நிறுவனம் இப்படியாக பிரத்தேகமான தனி இவி சேனலை துவங்கினால் அதன் விற்பனையை மேலும் பல மடங்கு அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை கையில் எடுக்கும். இதனால் இந்தியாவில் இபி விற்பனை மேலும் அதிகரிக்கும். அதே நேரம் போட்டி நிறுவனங்களும் இப்படியான முடிவுகளை கையில் எடுத்து இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும்.
தற்போது டாடா நிறுவனத்திற்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரர்களை களம் இறக்க தயாராகி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் காராக மாறும். இந்நிலையல் மாருதி நிறுவனமும் 6 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் 2030-ஐ இலக்காக வைத்து எலெக்ட்ரிக் கார்களை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை தற்போதைய வகுத்துள்ளனர். இதனால் எதிர்காலத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்பதில் அச்சம் இல்லை.


Click it and Unblock the Notifications









