கம்மி ரேட்ல சன்ரூஃப் கார் வாங்கனுமா? இதுதான் ஒரே சாய்ஸ்! என்ன ரேட்னு தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரா ஐசிஎன்ஜி என்ற காரை இந்திய மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த கார் தான் இந்தியாவில் விலை குறைந்த சன்ரூஃப் வசதி கொண்ட காராக விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அல்ட்ராஸ் காரின் ஐசிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகும் போதே ஏகப்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் காரின் இன்ஜினில் மட்டும் சிஎன்சி ஆப்ஷனை கொண்டு வராமல் மற்ற சில புதிய அம்சங்களையும் இந்த காரில் அறிமுகப்படுத்தி இருந்தது.

அதன்படி இன்ஃபோடென்மென்ட் ஸ்கிரீனில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் டிஸ்ப்ளே, இன்பில்ட் ஏர் பியூரிஃபையர், லெதர் சீட்டுகள், முக்கியமாக வாய்ஸ் எனேபில்ட் எலக்ட்ரானிக் சன் ரூப் ஆகியன இந்தக் காரில் இடம் பெற்றுள்ளது. இந்தப் புதிய அம்சங்களை டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் மட்டும் டீசல் கார்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது சிஎன்ஜி காரில் இதே அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் அம்சங்களைக் கொண்ட சிஎன்ஜி வேரியன்ட் தற்போது தான் அறிமுகமாகியுள்ளது. டாட்டா அல்ட்ரா எக்ஸ்எம் பிளஸ் எஸ் வேரியண்டில் எலக்ட்ரானிக் சென்டர் ஆப்ஷன் இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 7.9 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் எலக்ட்ரானிக் சென்று ஆப்ஷன் கொண்ட விலை குறைந்த காராக இந்த டாடா அல்ட்ராஸ் கார்தான் தற்போது இந்தியாவில் இருக்கிறது.

இந்த டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் இன்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் செய்யவில்லை. டாடா நிறுவனம் வழக்கமான தனது 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை தான் இதற்குப் பயன்படுத்துகிறது இது 86 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது. இது போக 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் டாடா அல்ட்ராஸ் காரில் இருக்கிறது. இது 90 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் அல்ட்ரா ஹீட்டர் போ காரில் இருக்கிறது. இது 110 பிஎஸ் பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் மார்க்கெட்டில் ஹுண்டாய் ஐ20, மாருதி பலேனோ, டொயோட்டா கிளன்ஸா, ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை பொருத்தவரை டாடா அல்ட்ராஸ் காரின் எக்ஸ் இ, எக்ஸ் எம் பிளஸ், எக்ஸ் எம் பிளஸ் எஸ், எக்ஸ் இசட், எக்ஸ் இசட் பிளஸ் எஸ் , எஸ் இசட் பிளஸ் ஓ எஸ் ஆகிய வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ரூபாய் 7.55 லட்சம் முதல் ரூபாய் 10.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:இந்தியாவில் தற்போது சன்ரூஃப் வசதி கொண்ட கார்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை கார்களில் இந்தவசதியில்லாமல் பலர் தவித்தனர். தங்கள் சன்ரூஃப் கார் கனவை நிறைவேற்றிக்கொள்ள டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி கார் ஒரு பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications









