டாடா வாகனங்களின் தரத்தை தேடி எல்லாரும் வராங்க!! நம்பி வரவங்களுக்கு இப்படியா பண்றது...

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் கமர்ஷியல் வாகனங்களின் விலைகளை வருகிற 2024 ஜனவரி 1ஆம் முதல் அதிகரிக்க தயாராகி வருகிறது. இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் கடந்த பல வருடங்களாக ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது கமர்ஷியல் வாகனங்களின் விலைகளை வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

tata commercial vehicles prices hike

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து டாடா கமர்ஷியல் வாகனங்களின் விலைகளும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இந்த விலை அதிகரிப்பு ஆனது வருகிற 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும், வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு அதிகரிப்பது இந்த விலை உயர்வுக்கு காரணமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 12,800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டாடா குழுமத்தில் 4200 கோடி டாலர்கள் மதிப்பிலானது டாடா மோட்டார்ஸ் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், கார்கள் மட்டுமின்றி, பிக்-அப் ட்ரக்குகள், லாரிகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதிலும் இந்திய அளவில் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது.

tata commercial vehicles prices hike

அதாவது, அந்த அளவிற்கு டாடாவின் நெட்வொர்க் பரந்து விரிந்துள்ளது. இதனாலேயே, கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து 3வது இடம் வகிக்கும் டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. டாடா நிறுவனத்திற்கு வாகன ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்கள் இந்தியாவில் நிறைய இடங்களில் உள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி மற்றும் தென் கொரியாவிலும் உள்ளன. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளிலும் டாடாவின் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2023 மார்ச் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 88 மற்ற துணை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்துள்ளது.

tata commercial vehicles prices hike

டாடா கமர்ஷியல் வாகனங்களின் விலைகள் இந்த 2023ஆம் வருடத்தில் ஏற்கனவே 3 முறை அதிகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரியில் 1.2%-மும், மார்ச்சில் சுமார் 5%-மும் அதிகரிக்கப்பட்டு இருந்தன. கடைசியாக கடந்த அக்டோபர் மாதத்தில் கூட 3% அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த 3 மாதங்களிலேயே மீண்டும் ஒருமுறை அவற்றின் விலைகள் 3% அதிகரிக்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நிறுவனங்களை போன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இவ்வாறு அவ்வப்போது அதன் வாகனங்களின் விலைகளை அதிகரித்து வருகிறது. வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை சமாளிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இவ்வாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகிறது. டாடாவின் இந்த விலை உயர்வை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 19:19 [IST]
English summary
Tata motors announces price hike of its commercial vehicles check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X