அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்! கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்! டாடாவும் இப்படி பண்ணீருச்சே!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). பயணிகள் வாகனங்கள் (Passenger Vehicles), அதாவது கார்கள் மட்டுமின்றி, வர்த்தக வாகன (Commercial Vehicles) விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கை ஓங்கியுள்ளது.

இதில் வர்த்தக வாகனங்களின் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை 3 சதவீதம் வரை உயரவுள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

Tata Logo

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகின்ற காரணத்தால்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை உயரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடப்பு 2023 காலண்டர் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்துவது இது 3வது முறை ஆகும். முன்னதாக நடப்பாண்டு ஜனவரி மாதம் 1.2 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து மார்ச் மாதம் 5 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

Tata Commercial Vehicles

இதை தொடர்ந்து 3வது முறையாக வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து 3 சதவீதம் வரை விலை உயரவுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், இந்தியாவில் பலர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த விலை உயர்வு, பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

முன்னதாக கியா மோட்டார்ஸ் (Kia Motors) நிறுவனமும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன்படி கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இந்த விலை உயர்வும் வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வரவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வாகனங்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா நிறுவனத்தின் விலை உயர்வு அறிவிப்பு வெளியான சமயத்திலேயே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் இதனை கூறியிருந்தது.

அதற்கேற்ப தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. புதிய வாகனங்களை வாங்க அவர்கள் கூடுதல் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இந்த அதிர்ச்சிக்கு முக்கியமான காரணம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 27, 2023, 17:10 [IST]
English summary
Tata motors commercial vehicles price hike 3 per cent from 1 october
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+