இந்த மாதிரி ஒரு கார் ஷோரூமை இதுக்கு முன்னாடி யாரும் பாத்திருக்க மாட்டீங்க! சம்பவத்திற்கு நாள் குறித்த டாடா!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் டாடா (Tata) அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும், முன்னேற முடியவில்லை.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது என கேட்டால், டாடா என ஒரு குழந்தை கூட கூறி விடும். டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) என 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.

Tata Sierra

ஆனால் வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை விற்பனை செய்யும் ஷோரூம்களில்தான், எலெக்ட்ரிக் கார்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழல் இன்னும் சில நாட்களில் மாறவுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என பிரத்யேகமான ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்ய கூடிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் ஷோரூம் வரும் டிசம்பர் 21ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் 2 எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை இரண்டுமே டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில்தான் திறக்கப்படவுள்ளன.

Tata Nexon EV

இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வழக்கமான ஷோரூம்களுடன் ஒப்பிடும்போது, இந்த எலெக்ட்ரிக் கார் ஷோரூம்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஷோரூம்களில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என கூறப்படுகிறது. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) போன்றவை இதில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

இதுதவிர டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV), டாடா சஃபாரி இவி (Tata Safari EV) மற்றும் டாடா சியாரா இவி (Tata Sierra EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களும் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே தற்போதே எலெக்ட்ரிக் கார்களுக்கு என பிரத்யேகமான ஷோரூம்களை திறப்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் கார்களுக்கென பிரத்யேகமான ஷோரூம்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2023, 17:45 [IST]
English summary
Tata motors dedicated ev showrooms open date all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+