1 லட்சம் பேரிடம் கேட்டு டாடா எடுத்த முடிவு! இந்த மாதிரி ஒரு கார் ஷோரூமை எங்கயுமே பாத்திருக்க மாட்டீங்க!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகியவை ஆகும். தற்போதைய நிலையில் இந்த அனைத்து எலெக்ட்ரிக் கார்களும் வழக்கமான டாடா ஷோரூம்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இனி அப்படி நடக்காது.

Tata Motors Electric Car Showroom

ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என்றே பிரத்யேகமாக தனி ஷோரூம்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஹரியானா (Haryana) மாநிலம் குர்கான் (Gurgaon) நகரில், 2 எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது திறந்துள்ளது.

இந்த ஷோரூம்களில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். வரும் ஜனவரி 7ம் தேதியில் இருந்து, இந்த எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் இத்தகைய எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tata Motors Electric Car Showrooms Opened In Gurgaon

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்தமாக 10 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. எனவே பன்ச் இவி (Punch EV), கர்வ் இவி (Curvv EV), ஹாரியர் இவி (Harrier EV), சஃபாரி இவி (Safari EV) மற்றும் சியாரா இவி (Sierra EV) என வரிசையாக பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திறக்க தொடங்கியுள்ள புதிய எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களில்தான் விற்பனை செய்யப்படும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து பிறகுதான், இந்த புதிய ஷோரூம்களை திறக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள் வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்க்கின்றனர் என்பது அவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என விருப்பம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள சூழலில், இந்த புதிய ஷோரூம்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 15:42 [IST]
English summary
Tata motors electric car showrooms opened in gurgaon all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+