டாடா எடுத்த அதிரடி முடிவு! இனி ஊர்ஊருக்கு புது ஷோரூம் திறக்கப்போறாங்களாம்! ஏன் தெரியுமா?

டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனி பிராண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. டாடா.இவி என உருவாக்கப்பட்டுள்ள இந்த பிராண்ட் இது தான். இனி டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னே நிறுவனமாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கிறது இந்தியாவில் அதிகமாக எடுத்துக் காட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனமாக இந்நிறுவனம் தான் இருக்கிறது.

tata ev brand

இந்நிறுவனத்தின் ஏகப்பட்ட எலெக்ட்ரிக்கல் தயாரிப்புகள் இருக்கிறது. மக்கள் மத்தியிலும் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் மக்கள் பலர் இன்றைய டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். தற்போது டாடா நிறுவனம் தனது கார் விற்பனை பிராண்டிலேயே எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனி பிராண்ட் ஒன்றை உருவாக்குகிறது. டாடா டிவி என்ற இந்த பிராண்டில் தான் இனி டாடா நிறுவனம் தொடங்கி எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தனியான ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் எல்லாம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tata ev brand

இப்படியாக தனி பிராண்டை உருவாக்குவதன் மூலம் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கும் அனுபவத்தை தர முடியும் என கூறுகிறது. மற்ற நிறுவனங்களுடன் மற்ற பெட்ரோல் மற்றும் டீசல் காருடன் ஒப்பீடு இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேர்வுகளை மட்டும் ஒரே ஷோரூம் மூலம் கொண்டு வருவது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தேவையை நிறைவேற்ற பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான இபி விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் 100 எலெக்ட்ரிக் கார்களில் 70 எலக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்தின் கார்களாகவே இருக்கின்றன குறிப்பாக டாடா நிறுவனத்தின் டாடா நெக்ஸான் இவிகளுக்கு தான் மார்க்கெட்டில் அதிக அளவிலான மவுசு இருக்கிறது.

tata ev brand

டாடா நிறுவனம் இந்த இவிக்கான தனி பிராண்டை ஒவ்வொரு கட்டங்களாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது எப்படி டாடா இவி கார்கள் டாடா ஷோரூமில் விற்பனை ஆகிறதோ அப்படியே விற்பனை தொடரும். ஆனால் படிப்படியாக இந்த ஷோரூங்கள் கொண்டு வரும் போது அதன் விற்பனை இவி ஷோரூமுக்கு பிரத்தியேகமாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் தனது புதிய டாடா இவி பிராண்டில் சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் மாசு ஏற்படுத்தாத வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது. அதனால் இந்த பிராண்டின் கீழே எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகும் மற்றபடியான ஹைபிரிட் போன்ற வாகனங்கள் இதில் விற்பனைக்கு வராது என தெரிகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீ வத்சவா கூறும் போது: " நாங்கள் டாடா இவி என்ற புதிய சகாப்தத்திற்குள் நுழையப் போகிறோம். எங்கள் புதிய பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆட்டோமொபைல் துறையில் ஒரு நல்ல பாசிட்டிவான மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறோம். நீடித்த உழைப்பு, வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இந்த டாடா இவி பிராண்டின் தலையான நோக்கமாக இருக்கும். எங்கள் தயாரிப்பு மற்றும் சர்வீஸ் இரண்டும் தரமானதாகவும் வாடிக்கையாளர்கள் திருப்தியான வகையிலும் இருக்கும்" என்று கூறினார்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் இவி தயாரிப்புகளில் மிக சீக்கிரமாகவே வந்து நல்ல வளர்ச்சியை பெற்று தற்போது இவிகளின் மார்க்கெட் பங்கு மிகப்பெரிய பங்கை டாடா நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த பங்கிற்கு போட்டியாக பல தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை களத்திற்கு கொண்டு வந்தாலும் பெரியதாக ஜெயிக்கவில்லை. இந்நிலையில் தனியாக ஒரு பிராண்டை டாடா நிறுவனம் உருவாக்கியுள்ளது இன்னும் அதற்கு வழு சேர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2023, 16:21 [IST]
English summary
Tata motors introduces new brand identity for ev vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X