இந்த டாடா கார் மட்டும் விற்பனைக்கு வந்துச்சு, ஹூண்டாய் பெருசா அடி வாங்கும்!! அப்படி என்ன இருக்கு இந்த காரில்?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் அல்ட்ராஸ் (Altroz) காருக்கு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதனால், ஐ20 என் காரை விற்பனை செய்வதில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு எந்த அளவிற்கு சவால் காத்திருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீப மாதங்களில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட், ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் என வரிசையாக கார்கள் அப்டேட் செய்யப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. டாடா மோட்டார்ஸ் மட்டுமல்ல, எந்தவொரு கார் நிறுவனமும் அவ்வப்போது அதன் கார்களை அப்டேட் செய்து புத்துணர்ச்சியாக வைத்திருந்தால் தான் பிழைப்பை ஓட்ட முடியும்.

tata plans launch altroz racer

டாடா மோட்டார்ஸ் அடுத்த ரவுண்ட்டிற்கும் தயாராகி விட்டது. ஹூண்டாய் மோட்டார்ஸின் ஐ20 ஹேட்ச்பேக் காருக்கு போட்டியாக விளங்கும் அல்ட்ராஸை அப்டேட் செய்ய டாடா நிறுவனம் ரெடியாகி வருகிறது. ஆனால், அல்ட்ராஸுக்கு வழங்கப்பட உள்ளது பெரிய அப்டேட். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த கார் அல்ட்ராஸ் ரேஸர் என்கிற பெயரில் விற்பனைக்கு வரலாம்.

அல்ட்ராஸ் ரேஸர் என்ற பெயரில் கடந்த ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு நிறுத்தியது. அளவை பொறுத்தவரையில், இரண்டிற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஆட்டோ எக்ஸ்போவில், அல்ட்ராஸ் ரேஸர் காரில் பெயிண்டிலும், காரை சுற்றி சிறு சிறு காஸ்மெட்டிக் அப்டேட்களும் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன.

tata plans launch altroz racer

ஏனெனில் முக்கியமான அப்டேட் காரின் என்ஜினில் தான் இருந்தது. இதனால்தான், சமீபத்தில் மறைப்புகளால் மறைக்கப்பட்டப்படி சாலையில் சோதனை செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் காரின் சோதனை மாதிரியின் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரின் முன்பக்க பொனெட்டில் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ரியர்வியூ மிரர்கள், ரூஃப், முன்பக்க கிரில், 16-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் பின்பக்க பூட் லிட் பகுதிகளிலும் பளபளப்பான கருப்பு நிறத்தை காண முடிகிறது. காரின் மற்ற பகுதிகளை சிவப்பு நிறம் ஆக்கிரமித்து உள்ளது. அதுமட்டுமின்றி, 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு-டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்ட வசதிகளும் அல்ட்ராஸ் ரேஸரில் இடம் பெற்றுள்ளன.

tata plans launch altroz racer

இவற்றுடன், ஆட்டோ எக்ஸ்போவின் போது காரில் சிங்கிள்-பேன் சன்ரூஃப்-ஐயும் காண முடிந்தது. ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்ற சமயத்தில் அல்ட்ராஸ் காரில் சன்ரூஃப் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட அப்டேட்டில் சன்ரூஃப்-ஐ அல்ட்ராஸ் பெற்றது. ஆதலால், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரிலும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபுல்-ஃபார்மில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் டாடா பிராண்டின் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும் என்ற அளவிற்கு கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அல்ட்ராஸ் ரேஸரும் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

tata plans launch altroz racer

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 15:42 [IST]
English summary
Tata motors plans to launch altroz racer here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X