Tata Nexon காரின் 5 லட்சமாவது யூனிட் விற்பனைக்கு தயார்... உண்மை தெரிஞ்சவங்க இந்த கார மட்டும் வாங்குறாங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸான் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான ஓர் நிகழ்வே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது.
இந்த கார் மாடலின் 5 லட்சமாவது யூனிட் தற்போது உற்பத்தி ஆலையில் இருந்து விற்பனைக்காக வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவில் டாடா நெக்ஸானுக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டாடா நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ளது.

இங்குள்ள ரஞ்ஜன்கவுன் உற்பத்தி ஆலையில் இருந்தே 5 லட்சமாவது நெக்ஸான் எஸ்யூவி கார் உற்பத்தி செய்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் இந்தியாவில் முதல் முறையாக 2017 செப்டம்பரிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இது விற்பனைக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான வருடங்களே ஆகின்றன.
இந்த நிலையிலேயே இந்த அசாத்தியமான உற்பத்தி எண்ணிக்கையை நெக்ஸான் பெற்றிருக்கின்றது. இந்த கார் அதிக பாதுகாப்பு தரம்மிக்கதாக இருக்கின்றது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற டாடா தயாரிப்பு இதுவாகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த சூப்பர ரேட்டிங்கை டாடாவின் தயாரிப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், இந்த காரின் விலையோ மிகவும் மலிவானதாக இருக்கின்றது. இதுவே இந்த காரை இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்க காரணமாக அமைந்து உள்ளது. டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் ரூ. 7.80 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
அதேவேளையில், இதன் அதிகபட்ச விலை ரூ. 14.35 லட்சமாக இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்தியாவில் இந்த கார் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் ஆகிய இரு விதமான மாடல்களிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நெக்ஸான் இவி பிரைம் ரூ. 14.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 16.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதுபோன்று பன்முக தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைப்பதாலும், அதற்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்த கார் ஓர் பெட்ரோல் மற்றும் ஓர் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவட்ரோன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் ரெவோடார்க் டீசல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகளிலேயே நெக்ஸான் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மோட்டார்களுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், 6 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனலாகவும் வழங்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் இந்த காரின் அப்டேட் வெர்ஷனை இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. பன்முக அப்டேட்டுகளுடன் அது விற்பனைக்கு களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
நெக்ஸானின் ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகள் ஆகியவற்றிலேயே மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, 1.2 டிஐ டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த மோட்டார் 125 பிஎஸ் வரை பவரை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், அதிக பவர்ஃபுல்லான தேர்வாக 2023 நெக்ஸான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
நெக்ஸானின் அப்டேட்டட் வெர்ஷன் இந்தியாவில் அந்த காருக்கான சந்தையை மேலும் விரிவாக்கும் செய்யும் என நாங்கள் யூகிக்கின்றோம். இந்த காரின் இந்திய இருப்பு ஏற்கனவே பல கார் மாடல்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதனை புதிய வெர்ஷனின் வருகை மேலும் இரு மடங்காக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications








