மாதத்திற்கு மாதம் டாடா மோட்டார்ஸின் விற்பனை குவியுது!! கடந்த செப்டம்பரில் எவ்வளவு விற்பனை தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்றால் அதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், டாடா நிறுவனம் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்த கார்கள் குறித்த எண்ணிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

கமர்ஷியல் வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்களையும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலமாக, பயணிகள் வாகனங்கள் உற்பத்தியிலும் டாடா மோட்டார்ஸ் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, கார்கள் விற்பனையில் இந்தியாவின் 3வது டாப் பிராண்டாக டாடா விளங்குகிறது.

tata motors sales report september

ஆனால், கடந்த 2023 செப்டம்பர் மாத பயணிகள் வாகனங்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3% சரிவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கண்டுள்ளது. ஆனால், டாடாவின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை ஆனது 4% அதிகரித்துள்ளது. பேசஞ்சர்ஸ் & கமர்ஷியல் என இரண்டையும் சேர்த்து கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 82,023 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

ஆனால் 2022 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவை 80,633 ஆகும். இந்த வகையில் டாடா வாகனங்களின் விற்பனை ஆனது 2% அதிகரித்துள்ளது. அதுவே, கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு. 76,261 மட்டுமே ஆகும். பேசஞ்சர்ஸ் வாகனங்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், மொத்தம் 44,809 வாகனங்களை உள்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் டாடா விற்பனை செய்துள்ளது.

tata motors sales report september

இந்த 44,809 பயணிகள் வாகனங்களில் டிகோர் இவி, டியாகோ இவி மற்றும் நெக்ஸான் இவி போன்ற எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. இந்த எண்ணிக்கையை காட்டிலும் 6% அதிகமாக, 2022 செப்டம்பர் மாதத்தில் 47,654 டாடா பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2023 ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மொத்தமாக 1,37,950 டாடா பேசஞ்சர்ஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2022இல் இதே 3 மாதங்களில் சற்று அதிகமாக 1,42,325 வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தன.

டாடாவின் பயணிகள் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறைவே. கடந்த செப்டம்பர் மாதத்தில் 508 பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022 செப்டம்பரில் இதனை காட்டிலும் குறைவாக, வெறும் 210 பயணிகள் வாகனங்களை மட்டுமே டாடா நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. அதேபோல், கடந்த 3 மாதங்களிலேயே கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் அதிக எண்ணிக்கையில் டாடா பேசஞ்சர்ஸ் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

tata motors sales report september

ஆக மொத்தத்தில், உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் கணக்கில் எடுத்து பார்த்தால், 45,317 பயணிகள் வாகனங்களை கடந்த செப்டம்பரில் டாடா விற்பனை செய்துள்ளது. அதுவே 2022 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 47,864 ஆக பதிவாகியது. டாடாவின் கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், சிறிய அளவிலான கார்கே & பிக்அப் டிரக் வாகனங்களும், மிகுந்த எடை மிகுந்த ஹெவி லாரிகளும் தான் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனையாகி உள்ளன.

டாடாவின் சிறிய அளவிலான கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எப்போதுமே சிறப்பாக இருக்கக்கூடியதே. ஆனால் கடந்த மாத விற்பனையில் ஹெவி லாரிகளும் அவற்றுடன் இணைந்துள்ளன. மொத்தமாக, கடந்த மாதத்தில் 37,214 கமர்ஷியல் வாகனங்களை உள்நாட்டிலும், 1,850 கமர்ஷியல் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் டாடா செய்துள்ளது. மொத்தமாக, 39,064 டாடா கமர்ஷியல் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் விற்பனையில் ஒரு சமயத்தில் கமர்ஷியல் வாகனங்களே அதிக ஆதிக்கம் வகித்தன. ஆனால், இன்றோ கமர்ஷியல் வாகனங்களை விட பயணிகள் வாகனங்களை டாடா அதிகமாக விற்பனை செய்கிறது. வருங்காலங்களில் இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அடுத்தடுத்து புது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 3, 2023, 11:44 [IST]
English summary
Tata motors sales report 2023 september
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X