மைலேஜை வாரி வழங்கும் காரின் டெலிவரி பணியை டாடா தொடங்கிருச்சா!.. வெளியாகிய படத்தால் போட்டி நிறுவனங்கள் ஷாக்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Facelift Nexon) வெர்ஷனின் டெலிவரி பணிகளை நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி (Facelift Nexon SUV) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் தூண்டி வந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் டெலிவரி பணிகளையே அந்நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது.

Tata starts nexon faclift delivery

Image Source: ZigWheels இதை உறுதிப்படுத்தும் விதமான புகைப்படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக நெக்ஸானகவே ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானை வடிவமைத்து இருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு 8.01 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. வெளி மற்றும் உட்புறம் என அனைத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை டாடா, நெக்ஸானில் செய்திருக்கின்றது. இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஒன்று பெட்ரோல் மோட்டாராகவும், மற்றொன்று டீசல் மோட்டாராகும்.

பெட்ரோலை பொருத்த வரை 1.2 லிட்டர் டர்போ சார்ஜட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், டீசல் ஆப்ஷனில் 1.5 லிட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த டீசல் மோட்டார் அதன் போட்டி கார் மாடல்களைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியது என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது.

ஏஎம்டி வசதிக் கொண்ட டீசல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 24.01 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேவேளையில், டீசல் மேனுவல் நெக்ஸான் ஒரு லிட்டரக்கு 23.23 கிமீ மைலேஜையும், மேனுவல் கியர்பாக்ஸ் வசதி உடன் கொண்ட பெட்ரோல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் நெக்ஸான் 17.44 கிமீ மைலேஜையும் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

இத்தகைய அதிக மைலேஜ் தரும் கார் மாடலின் டெலிவரி பணிகளையே டாடா தற்போது தொடங்கி இருக்கின்றது. டீசல் மோட்டார் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று பட்ஜெட் விலையிலும், முன்பு இருந்ததைப் போல அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் அதிக கவர்ச்சியானதாகவும் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் விற்பனைக்கு வந்திருப்பதால் அதற்கு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை ஆங்கரிங் பாயிண்டுகள், பார்க்கிங் சென்சார்கள், அவசரக கால மற்றும் பிரேக் டவுண் கால் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகள் பலவும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் இந்த திரை உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், ஃபேன்சி ஷிஃப்டர், ரியர் பகுதிக்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் (குரல் கட்டளை வசதி உடன்) மற்றும் 382 லிட்டர் பூட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளும் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னும் சில நாட்கள் இந்த காரின் டெலிவரி தொடங்க ஆகும் என எண்ணிக் கொண்டிருந்த வேளையிலேயே தற்போது டாடா மோட்டார்ஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நெக்ஸானின் டெலிவரி பணியைத் தொடங்கி இருக்கின்றது. இதனால், இந்த காரை புக் செய்திருந்தவர்கள் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 21, 2023, 22:21 [IST]
English summary
Tata motors starts nexon faclift delivery in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+