சோலார் காராக மாற்றப்பட்ட டாடா நானோ... வெறும் 30 ரூபாய் செலவில் 100 கிமீ பயணம்...
டாடா நானோ கார் சோலார் மின்சார காராக மாற்றப்பட்டு இருக்கும் சம்பவம் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இதைவிட கூடுதல் ஆச்சரியமளிக்கும் விதமாக அந்த காரில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க வெறும் 80 பைசா மட்டுமே செலவாகும் என்கிற தகவல் உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா நானோ சோலாரில் இயங்கும் மின்சார காராக மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் மின்சார கார் பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இதுபோல் இந்த வாகனம் மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆனால், மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மட்டுமே நானோ மாற்றப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே முதல் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் காராக அது தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றது. எனவேதான் இந்த நிகழ்வு ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களையும் கவர்ந்த சம்பவமாக மாறியிருக்கின்றது. மேற்கு வங்க மாநிலம் கட்ஜுரிடங்கா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜித் மண்டல். இவரே டாடா நானோ காரை சோலார் வாகனமாக மாற்றியவர் ஆவார்.
பிசினஸ் மேனான இவர் சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கும் நானோ காரிலேயே தன்னுடைய அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். வழக்கமான நானோ சாலையில் செல்லும்போது ஓர் ஆட்டோவை போல் ஒலியை எழுப்பிய வண்ணம் பயணிக்கும். ஆனால், இந்த நானோ மிகவும் அமைதியான வாகனமாக சாலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மின் மோட்டார்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன் கூடுதல் சிறப்பு என்ன என்றால் இந்த காரில் 100 கிமீ வரை பயணிக்க வெறும் ரூ. 30 முதல் ரூ. 35 வரை மட்டுமே செலவாகுமாம். தற்போது நானோ சோலார் காரை பயன்படுத்தி வரும் மனோஜித்தே இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
இந்த தகவல் பிற பெட்ரோல், டீசல் கார் பயன்பாட்டாளர்களை மிக பெரிய பொறாமைக்கு ஆளாக்கும் வகையில் அமைந்துள்ளது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் 10 கிமீ முதல் 15 கிமீ வரை பயணிப்பதற்கே நூற்றுக் கணக்கான ரூபாய் செலவாகும். இந்த நிலையில், சோலார் நானோ காரில் 100 கிமீட்டர் பயணிக்கவே வெறும் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் மட்டுமே செலவாகும் நம்ப முடியாத தகவலாக அமைந்துள்ளது.

மேலும், ஒரு கிமீ பயணிக்க வெறும் 80 பைசா மட்டுமே தனக்கு செலவாகுவதாக மனோஜித் கூறியிருக்கின்றார். தன்னுடைய காரை சார்ஜ் செய்தவதற்கான சோலார் பேனலை நானோவின் மேற்கூரையிலேயே அவர் பொருத்தி இருக்கின்றார். இதுபோன்று இன்னும் சில மாற்றங்களை நானோவை முழு சோலார் காராக மாற்ற அவர் செய்திருக்கின்றார்.
அந்தவகையில், பெட்ரோல் எஞ்ஜின்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இது மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வேகத்தை கட்டுப்படுத்த ஏதுவாக கியர் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓர் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆகும்.

Source: News18
நான்காவது கியரிலேயே உச்ச வேகமான மணிக்கு 80 கிமீ வேகத்தை தொட முடியும். மனோஜித், தன்னுடைய சிறு வயதில் இருந்து புதுமையான விஷயங்களை செய்யும் வழக்கம் கொண்டவர் என கூறப்படுகின்றது. அவரின் இந்த தனித்துவமான செயல்பாடே சோலார் நானோ கார் உருவாக்க அவரை தூண்டியிருக்கின்றது.
இந்த வாகனத்தை சோலார் மின்சார காராக மாற்ற அவர் எவ்வளவு செய்தார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. எங்களின் யூகிப்பின்படி ஒன்றிரண்டு லட்ச ரூபாய் மட்டுமே இதற்கு செலவாகியிருக்கும். தற்போது சோலார் நானோ காரை பதிவு செய்வதற்கான முயற்சியில் மனோஜித் ஈடுபட்டு வருகின்றார். அரசிடம் இருந்து இதற்கான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. நீண்ட நாட்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









