பைக் வியாபாரம் படுக்க போகுது! டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! இதை விட கம்மியா யாராலயும் தர முடியாது
இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து கொண்டுள்ள நிறுவனம் என்ற பெருமை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு உண்டு. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருப்பதற்கு, அதன் 3 தயாரிப்புகள் காரணமாக இருக்கின்றன.
அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகியவை ஆகும். இதில், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் விலைதான் மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 8.69 லட்ச ரூபாயாக உள்ளது (எக்ஸ் ஷோரூம்).

ஆனால் இதைக்காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அது டாடா நானோ இவி (Tata Nano EV) எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நானோ காருக்கு அறிமுகமே தேவையில்லை. மிகவும் குறைவான விலையில் களமிறங்கி, உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இந்திய தயாரிப்பு அது. ஆனால் எதிர்பாராத ஒரு சில காரணங்களால் டாடா நானோ தோல்வியை தழுவ நேரிட்டது. எனவே அதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் டாடா நானோ காரை கால மாற்றத்திற்கு ஏற்ப எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற ஒரு சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
இதன்படி ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி, டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி நகர பயன்பாட்டிற்கும், அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வருவதற்கு இந்த ரேஞ்ச் (Range) போதுமானதுதான்.
அதே நேரத்தில் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 அல்லது 110 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 25 ஹெச்பி மற்றும் 85 என்எம் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரின் எடை 800 கிலோ என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 180 மிமீ ஆக இருக்கலாம். எலெக்ட்ரிக் கார்களில் இருக்க கூடிய மிகப்பெரிய பிரச்னையே பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆவதுதான். ஆனால் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரில் இந்த பிரச்னை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரில், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை பயன்படுத்தினால், வெறும் 1 மணி நேரத்திற்கு உள்ளாக பேட்டரியை 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் காரின் விலையும் மிகவும் குறைவாகதான் இருக்கும் என கூறப்படுகிறது.
அனேகமாக 5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்படலாம். இதன் மூலம் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (India's Most Affordable Electric Car) என்ற பெருமையை டாடா நானோ இவி எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருப்பது மிகப்பெரிய பின்னடைவு. இப்படிப்பட்ட ஒரு சூழலில் டாடா நானோ இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








