இந்த காரையா இந்தியர்கள் கூட்டம் கூட்டமா வாங்கிட்டு இருக்காங்க! நானோ காரோட மோதினதுக்கே அப்பளமா நொறுங்கிடுச்சு!

இந்த கார் பாதுகாப்பை வழங்குமோ, வழங்காதோ என்கிற சந்தேகம் எழுந்ததன் பெயரிலியே டாடா நானோ வெளியேற்றப்பட்டது. ஏழைகளுக்கான கார் என்கிற பெயரில் ரத்தன் டாடாவின் கனவு வாகனமாக இது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் என்கிற மிக மிகக் குறைவான விலையிலேயே நானோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஏழைகளுக்கும் கார்கள் சென்றடைய வேண்டும் என்கிற கண்ணோட்டத்திலேயே இந்த அளவு மிக மிகக் குறைவான விலையில் டாடா நானோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு போதிய அளவு வரவேற்புக் கிடைக்கவில்லை. மேலும், அதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என கருதப்பட்டது.

Hyundai venue hits tata nano

ஆகையால், இந்த காரை டாடா மோட்டார்ஸ் கனத்த இதயத்துடன் பின் வாங்கியது. இது வெளியேற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆகையால், இதன் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலையிலேயே இந்த காரை ஏன் வாங்காம விட்டோமோ என நினைத்துக் கவலையடையச் செய்யும் வகையில் சில நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

விபத்துகளில் தான் ஓர் உறுதியான கார் என்றும், மலைப்பாங்கான சாலைகளில் திறம்பட செயல்பட்டு தான் ஓர் மிக சிறந்த இயக்க திறன் கொண்ட கார் என்பதையும் டாடா அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டாடா நானோ அதிக உறுதியானது என்பதற்கு சான்றாக ஓர் புதிய விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

சமீபத்தில் டாடா நானோ மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய இரு கார்களும் விபத்தைச் சந்தித்தன. அதிக வேகத்தில் வந்த ஹூண்டாய் வென்யூ கார் வந்த வேகத்திலேயே டாடா நானோவின் பின் பகுதியில் மோதியது.இந்த விபத்தில் ஹூண்டாய் வென்யூ காரின் முகப்பு பகுதி மிக மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றது.

முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கிவிட்டது என்றே கூறலாம். வென்யூ சந்தித்து இருக்கும் பாதிப்பை வைத்து பார்த்தால், டாடா நானோவின் பின் பக்கம் மிக மிக மோசமாக உருக்குலைந்திருக்கும் என்றே அனைவரும் எண்ணுவர். அதற்கேற்பவே கடுமையான பாதிப்புகளை நானோ கார் சந்தித்து இருக்கின்றது.

ஆனால், வென்யூவுடன் ஒப்பிடுகையில் அந்த பாதிப்பு பெரியளவு கொண்டது இல்லை என்பதையும் நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. சிறிய சிறிய காயங்களை மட்டுமே இரு கார்களிலும் வந்தவர்கள் சந்தித்து இருக்கின்றனர்.

இந்த விபத்தால் நானோ காரின் பாதுகாப்பு திறன்மீது இருந்த கேள்வி தற்போது விலகி இருக்கின்றது. இந்த டாடா தயாரிப்பும் போதுமான அளவு பாதுகாப்பை வழங்கக் கூடியதே என்பதும் இந்த விபத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இந்த காரை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வருமா என்று கேட்டால், இந்த கேள்விக்கான பதில் எங்களிடம் இல்லை.

அதேவேளையில், இந்த காரை டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் மின்சார கார் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கின்றது. இதைவிட மிகக் குறைவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் காரா டாடா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவே நானோ இவியாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. எலெக்ட்ரிக் வடிவில் இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷனுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை கட்டாயம் இவி வெர்சனுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளையில், முன்பைவிட டாடாவின் தயாரிப்புகளின் தற்போது நம்பிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் விளைவாக நிறுவனத்தின் பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சமீப காலமாக டாடா நானோ காரின் திறன் பற்றிய தகவல்கள் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது.

இந்த நிலை கட்டாயம் அந்த கார் எதிர்காலத்தில் விற்பனைக்கு வரும் எனில் நல்ல டிமாண்டை ஏற்படுத்திக் கொடுக்கும். அதேவேளையில், இந்த புதிய விபத்து சம்பவத்தால் ஹூண்டாய் வென்யூ கார் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது. பலர் இந்த காரின் பாதுகாப்பு மற்றும் உறுதி தன்மைமீது கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

அதேவேளையில், வென்யூ காரின் கடுமையான சேதத்திற்கு க்ரம்பிள் ஜோன் (crumple zones) எனப்படும் நொறுங்கும் மண்டலமே காரணம் என கூறப்படுகின்றது. தற்போது விற்பனையில் உள்ள நவீன கால கார்கள் பலவற்றில் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இது விபத்தின்போது முதல் வரிசை ஆளாக செயல்படும்.

அதாவது, விபத்தினால் ஏற்படும் தாக்கத்தை முதல் ஆளாக தாங்கி நொறுங்கும். இதனால், வாகனத்தின் பிற பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறையும். குறிப்பாக, பயணிகளை பாதுகாக்க அது உறுதுணையாக இருக்கும். நேரடியாக கேபினுக்கு ஏற்படும் தாக்கத்தை அது தடுக்கும் என்பதால் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு தானாகவே கிடைத்துவிடும். இந்த சம்பவம் உள்ளதன் காரணத்தினாலேயே வென்யூ அதிக தாக்கத்தைச் சந்தித்தது போன்று தெரிவதாக வாகனத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நானோ கார் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு வரும்போது அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படாலம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், நாட்டில் வாகன பாதுகாப்பு விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான கடும் கெடுபிடி காரணமாகவே கடந்த காலத்தில் நானோ நாட்டை வெளியேற காரணமாக அமைந்தது.

Article Published On: Thursday, May 11, 2023, 17:39 [IST]
English summary
Tata nano hyundai venue met accident video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+