ஆஃப் ரோடை அசால்ட் செய்யும் டாடா நானோ... மஹிந்திரா தாருக்கே டஃப் கொடுத்ததால் வாகன ஆர்வலர்கள் ஸ்டண் ஆயிட்டாங்க!
டாடா நானோ காரா இது என நினைக்கும் அளவிற்கு அந்த வாகனம் ஆஃப் ரோடு பயணத்தின் போது மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இது பற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக, மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவின் எந்தமாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் அசால்ட் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், குடும்ப பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும் இதனை மஹிந்திரா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

இதனால்தான் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின்ற நிலையில் இப்போதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது, மஹிந்திரா தார். இந்த காருக்கே டஃப் கொடுக்கும் விதமாக டாடா நானோ கார் செயல்பட்டு இருக்கின்றது.
இதுகுறித்த வீடியோ வெளியாகி அனைவரையும் நானோ ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. டாடா நானோ, பழைய தலைமுறை தார் மற்றும் ஸ்கார்பியோ 4X2 எஸ்யூவி ஆகிய கார்கள் கரடு-முரடான காட்டு பகுதியில் வைத்து ஆஃப்-ரோடு பயணத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பயணத்தின்போது டாடா நானோ பெருத்த சிக்கலில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறே வீடியோவை எடுத்த இளைஞர்களும் கருதி இருக்கின்றனர். ஆனால், பல இடங்களில் தான் ஓர் தனி திறன்மிக்க கார் என்பதை டாடா நானோ வெளிக்காட்டி இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில இடங்களில் 4X2 தொழில்நுட்பம் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ காரே திணறிய நிலையில், அந்த இடங்களை டாடா நானோ அசால்டாக கடந்திருக்கின்றது.
இதை வீடியோ வாயிலாக நம்மாலும் காண முடிகின்றது. குறிப்பாக, ஓர் கொண்டை ஊசி வளைவில் ஸ்கார்பியோ அதன் டிராக்சனை (இழுவையை) இழந்து ஏற முடியாமல் திணறியது. பின்னர் இளைஞர்களின் முயற்சியை அடுத்து அந்த கார் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதேபோல் மஹிந்திரா தார் காரும் லேசான சிக்கலை அதே ஏற்றத்தில் சந்தித்தது.

ஆனால், சில ட்ரிக்ஸைத் தொடர்ந்து அது அசால்டாக அந்த இடத்தை சமாளித்தது. இவ்வாறு பயணம் சென்றுக் கொண்டிருக்க குறிப்பிட்ட ஓர் இடத்தை மஹிந்திரா தார் அசால்டாக கடக்க, ஸ்கார்பியோவால் அந்த இலக்கை அடையவே முடியவில்லை. அதன் பின் வீல்கள் தரையில் இருந்து விலகியதனால் எஸ்யூவியால் முன்னேறவில்லை.
ஆகையால், அதனை பின்னோக்கி இளைஞர்கள் கொண்டு வந்தனர். அதே இடத்தை கடக்க நானோ நகர்த்தப்பட்டது. இது தார் எஸ்யூவி-யை போல் மிகவும் அசால்டாக கடந்தது. ஆனால், சேற்றில் சிக்கிக் கொண்டது. அதேவேளையில், 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட ஸ்கார்பியோவால் செய்ய முடியாததை நானோ செய்து காட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
நானோவின் இந்த திறனக்கு பெரியளவில் எல்லாம் காரணங்கள் இல்லைங்க. டாடா நானோ மிக குறுகிய வீல்பேஸ் கொண்ட கார் மாடல் ஆகும். இதுவும், அந்த கார் சில கஷ்டமான இலக்குகளை அசால்டாக காரணமாக இருக்கின்றது. இதேபோல், இந்த காரில் எந்தவொரு ஓவர்ஹேங்குகளும் இல்லை.
ஆகையால், அதனால் சாய்வான மற்றும் இரக்கமான பகுதிகளை அசால்டாக கடக்க முடிந்திருக்கின்றது. நானோவின் எஞ்ஜின் மிக சிறியது. அதேபோல் பெரியளவில் பவரை அது வெளியேற்றாது. ஆனால், மிகுந்த மேடான மற்றும் இறக்கமான பகுதிகளை அது சமாளிக்கும் திறன் கொண்டது. இதன் விளைவாக நாம் எதிர்பார்த்திராத சாகசங்களை எல்லாம் அதனால் செய்ய முடிந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications
