ரூ.8 லட்சத்தில் கிடைக்கும் டாடா நெக்ஸான் காரில் இவ்வளவு வசதிகளா!! பணத்தை தண்ணி போல் செலவழிக்க தேவையில்ல!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் நெக்ஸான் காரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான ஸ்மார்ட் வேரியண்ட்டின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் பலரால் வாங்கப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று, டாடா நெக்ஸான் ஆகும். ஆனால் கடந்த சில மாதங்களாக நெக்ஸான் கார்களின் விற்பனை குறைய துவங்கியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸானில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.

புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.10 லட்சத்தில் இருந்து ரூ.15.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெல்லி ஆன்-ரோடு விலை ஆனது ரூ.9.15 லட்சம் - ரூ.18.30 லட்சம் என்ற அளவில் வருகிறது. அப்படியென்றால், சென்னை ஆன்-ரோடு விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாக வரும். புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டீவ் மற்றும் ஃபியர்லெஸ் என்கிற 4 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதில் எண்ட்ரீ-லெவல் ஸ்மார்ட் வேரியண்ட் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த செய்தியில் நாம் பார்க்கப் போகும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.8.10 லட்சம் ஆகும். விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆனால், காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் பேஸிக்கான பாகங்களே உள்ளன. வீடியோவில், வெள்ளை நிறத்தில் இருக்கும் காரில் ORVM-கள் மற்றும் கதவு கைப்பிடிகள் மட்டும் தனித்து தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் உள்ளன. காருக்கு உள்ளே, புதிய 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் டாடா லோகோ உடன் உள்ளது. ஆனால், ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல் பொத்தான்கள் எதுவும் இல்லை.
நெக்ஸானின் விலை குறைவான ஸ்மார்ட் வேரியண்ட்டான இதில், மேனுவல் ஏசி கண்ட்ரோல்கள், முன்பக்க பவர் விண்டோஸ், செண்ட்ரல் லாக், சாய்க்க & மடக்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஃப்ளோர் கன்சோலில் பவர் அவுட்லெட் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. மற்றப்படி, இந்த குறைந்த விலை வேரியண்ட்டில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எதுவும் வழங்கப்படவில்லை.

அதேபோல், பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி வசதியும் இல்லை. இருப்பினும், இருக்கைகளில் குஷின் சிறப்பாக உள்ளதாக வீடியோவில் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு வசதிகளாக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் கைடிங் சென்சார்ஸ், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ISOFIX போன்றவை இடம்பெற்றுள்ளன.
நெக்ஸான் ஸ்மார்ட் வேரியண்ட்டை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், எண்ட்ரீ-லெவல் ஸ்மார்ட் வேரியண்ட்டில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, நெக்ஸானை சொல்லலாம். இந்தியாவின் குறைந்த விலையிலான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். அத்தகைய நெக்ஸான் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









