டாடாவின் பாதுகாப்பான கார் இனி இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! மாருதி கார்களை எல்லாம் அசால்டா ஊதி தள்ள போகுது!

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் (BS6 Phase 2) மற்றும் ஆர்டிஇ (RDE - Real Driving Emissions) விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. அனைத்து கார் நிறுவனங்களும் இதற்கு இணங்கும் வகையில், இன்ஜின்களை அப்டேட் செய்து வருகின்றன.

இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் (Tata Motors) தனது நெக்ஸான் (Tata Nexon) காரின் அதிகாரப்பூர்வ மைலேஜ் (Mileage) விபரங்களை தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. டாடா நெக்ஸான், இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார் ஆகும்.

டாடாவின் பாதுகாப்பான கார் இனி இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! மாருதி கார்களை எல்லாம் அசால்டா ஊதி தள்ள போகுது!

இன்னும் சொல்லப்போனால், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில், டாடா நெக்ஸான் சில சமயங்களில் முதலிடத்தை கூட பிடிக்கும். எனவே அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, வாடிக்கையாளர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு காராக டாடா நெக்ஸான் திகழ்ந்து வருகிறது.

இப்படி பல்வேறு பெருமைகளை பெற்றுள்ள டாடா நெக்ஸான் காரின் மைலேஜ், முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது அதிகரித்திருப்பது, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிதாக அமலுக்கு வரவுள்ள மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இன்ஜின் அப்டேட் செய்யப்பட்டிருப்பதுதான், மைலேஜ் அதிகரித்திருப்பதற்கு காரணம் என கருதப்படுகிறது.

டாடாவின் பாதுகாப்பான கார் இனி இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! மாருதி கார்களை எல்லாம் அசால்டா ஊதி தள்ள போகுது!

டாடா நெக்ஸான் பெட்ரோல் மேனுவல் (Petrol MT) மாடல்கள் முன்பு ஒரு லிட்டருக்கு 17.10 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கி வந்தன. இது தற்போது ஒரு லிட்டருக்கு 17.33 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டருக்கு 0.23 கிலோ மீட்டர் மைலேஜ் உயர்ந்துள்ளது.

மறுபக்கம் பெட்ரோல் ஏஎம்டி (Petrol AMT) மாடல்கள் முன்பு ஒரு லிட்டருக்கு 17.04 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கி வந்தன. இது தற்போது ஒரு லிட்டருக்கு 17.05 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு லிட்டருக்கு 0.01 கிலோ மீட்டர் மைலேஜ் அதிகரித்துள்ளது.

டாடாவின் பாதுகாப்பான கார் இனி இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! மாருதி கார்களை எல்லாம் அசால்டா ஊதி தள்ள போகுது!

இவை எல்லாம் கூட மிகவும் சிறிய அளவிலான உயர்வுதான். ஆனால் டாடா நெக்ஸான் காரின் டீசல் மாடல்களின் மைலேஜ் மிகவும் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளது. இந்த காரின் டீசல் மேனுவல் (Diesel MT) மாடல்கள், முன்பு ஒரு லிட்டருக்கு 21.10 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கி வந்தன.

இது தற்போது ஒரு லிட்டருக்கு 23.22 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு லிட்டருக்கு 2.12 கிலோ மீட்டர் மைலேஜ் அதிகரித்துள்ளது. மறுபக்கம் டீசல் ஏஎம்டி மாடல்கள் முன்பு ஒரு லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கி வந்தன.

இது தற்போது ஒரு லிட்டருக்கு 24.07 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு லிட்டருக்கு 2.07 கிலோ மீட்டர் மைலேஜ் அதிகரித்துள்ளது. நாங்கள் இங்கே கூறியுள்ளவை அனைத்தும் அராய் (ARAI) அமைப்பால் சான்று வழங்கப்பட்ட மைலேஜ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

நாங்கள் ஏற்கனவே கூறியபடி டாடா நெக்ஸான் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். தற்போது இந்த காரின் மைலேஜ் சிறப்பான முறையில் அதிகரித்திருப்பதால், வரும் காலங்களில் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

டாடா நெக்ஸான், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த பெருமையை தன்வசப்படுத்திய முதல் இந்திய கார் இதுதான். பாதுகாப்புடன், சிறப்பான மைலேஜூம் கிடைப்பதால், டாடா நெக்ஸான் வரும் காலங்களில் விற்பனையில் புதிய உச்சங்களை தொடலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 12:13 [IST]
English summary
Tata nexon bs6 phase 2 update mileage increased all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+