95 மணி நேரத்தில் காஷ்மீர் டூ கன்னியாகுமரி பயணித்த டாடா நெக்ஸான் இவி கார்! இது எப்படி சாத்தியமானது தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களில் நம்பர் விற்பனையில் இருப்பது டாடா நிறுவனம் தான் இந்நிறுவனத்தின் பல எலெக்ட்ரிக் கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டை அடித்துள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஒரே தயக்கம் நீண்ட தூர பயணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றது தானா என்றசந்தேகம் இருப்பது தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரி குறிப்பிட்ட அளவு தான் ரேஞ்ச் கொடுக்கும் அந்த பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்ய குறிப்பிட்ட மணி நேரமாகும். இதனால் நீண்ட தூர பயணத்திற்கு எலெக்ட்ரிக் கார்கள் லாயக்கு இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆங்காங்கே சார்ஜ் போட்டு செல்லலாம் என நினைத்தாலும் அதற்கான போதுமான சார்ஜிங் கட்டுமானங்கள் இந்தியாவில் இல்லை என பேசப்படுகிறது.

95 மணி நேரத்தில் காஷ்மீர் டூ கன்னியாகுமரி பயணித்த டாடா நெக்ஸான் இவி கார்! இது எப்படி சாத்தியமானது தெரியுமா?

இந்நிலையில் இதை பொய் என நிரூபித்து காட்ட டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயக்க முடிவு செய்யதது. மொத்தம் 4003 கிமீ தூரத்தை இந்த ஒரு காரை கொண்டு கடக்க முடிவு செய்தது. காரை அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இவி சார்ஜிங் மையங்களில் நிறுத்தி காரை சார்ஜ் ஏற்றிக்கொள்ள திட்டமிடப்பட்டது.

இந்த பணம் துவங்கி 95 மணி நேரம் 46 நிமிடங்களில் பயணத்தை முடித்து டாடா நெக்ஸான் இவி கார் சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்தம் 4 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த கார் பயணம் செய்துள்ளது. இதில் முக்கியமாக இந்த கார் உம்லிங் லா பாஸ் வழியாக இந்த கார் பயணம் செய்துள்ளது.

இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 19,024 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த சாலை தான் உலகிலேயே உயரமான சாலையாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் இந்தியன் புக் ஆஃப் ரேக்கார்ட்ஸ் புத்தகத்தில் சாதனையாக இடம் பிடித்துள்ளது. இது குறித்து டாடா நிறுவனம் கூறிய போது இது முழுவதும் பொது சார்ஜிங் மையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்ததால் மட்டுமே சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது மொத்தம் 21 இடங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியாக விரைவாக மட்டுமல்ல பெட்ரோல்/டீசல் கார்களை ஒப்பிடும் போது குறைவான செலவிலும் இந்த பணத்தை டாடா நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது.

மற்ற கார்களை போல கடினமான சாலைகள், மோசமான வானிலை ஆகியவற்றை கடந்த போதும் இந்த கார் சராசரியாக ரியல் வேல்டில் 300 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பணத்தை டாடா நிறுவனம மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், பொது சார்ஜிங் மையங்கள் மீதான பிம்பத்தை உடைக்கவுமே இதை செய்து காட்டியுள்ளது.

இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் நீண்டதூர பயணத்திற்கு ஏற்றது என்பது நிரூபணமாகிறது என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2023, 12:47 [IST]
English summary
Tata nexon covered 4000 km in 4 days reached kanyakumari to kashmir made record
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+