டாடா காருக்கு ரூ2.60 லட்சம் தள்ளுபடி! இன்னும் 15 நாள்ல ஸ்டாக் எல்லாம் விற்று தீரப்போகுது!
2023ம் ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளை விற்று தீர்க்க பல்வேறு விதமான தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். இந்த ஆண்டு பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அனைத்து தயாரிப்புகளுக்கும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன அதன்படி டாடா நெக்ஸான் இவி காருக்கு ரூபாய் 2.6 லட்சம் அளவிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரை கடந்த செப்டம்பர் மாதம் தான் அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த காரின் ப்ரீஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் பல்வேறு டீலர்களிடம் தற்போது ஸ்டாக்கில் உள்ளது. இந்த ஸ்டாக்குகளை எல்லாம் விற்கு தீர்க்க டாடா நிறுவனம் ப்ரீஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் காருக்கு மட்டும் ரூபாய் 2.60 லட்சம் அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது நேரடி கேஸ் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய வகையில் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த காரின் குறைந்தபட்ச வேரியண்டிற்கு நெக்ஸான் இவி பிரைம் காருக்கு வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூபாய் 1.40 லட்சம் போனதாக ரூபாய் 50,000 என மொத்தம் ரூபாய் 1.90 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 14.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தள்ளுபடிகள் போக தற்போது 12.60 லட்சம் முதல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொருத்தவரை வாடிக்கையாளர் கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 2.10 லட்சமும் எக்சேஞ்ச் போனதாக ரூபாய் 50,000 என மொத்தம் 2.6 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 16.49 லட்சம் முதல் 19.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தள்ளுபடிக்கு பிறகு இந்த கார் 13.89 லட்சம் முதல் 16.94 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு வேரியன்ட் கார்களுக்குமே கார்ப்பரேட் தள்ளுபடி என்பது வழங்கப்படவில்லை. இருந்தாலும் இதுவே மிக அதிகமான தள்ளுபடி விலை என்பதால் இந்த காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் காத்திருப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் இந்த மாதமே இந்த கார்கள் எல்லாம் ஸ்டாக்கிலிருந்து விற்பனையாகி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் இந்த காருக்கு போட்டியாக விற்பனையாகி வருவது மஹிந்திரா எக்ஸ்யூவி400 என்ற இவி கார் தான். இந்த காரின் விலையை தள்ளுபடிக்கு பிறகாக ஒப்பீடு செய்தால் பேஸ் வேரியன்டை பொறுத்தவரை டாடா நெக்ஸான் இவி தான் குறைவான விலையில் விற்பனை ஆகிறது. டாப் வேரியன்டை பொறுத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி கார் தான் குறைவான விலையில் விற்பனை ஆகிறது. இது ப்ரீஃபேஸ்லிஃப்ட் காரின் விலையுடன் செய்யப்பட்ட ஒப்பீடு தான்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் இவி வெர்ஷன் காரை பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுவும் பியர்லெஸ் பிளஸ் மற்றும் பியர்லெஸ் பிளஸ் எஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மொத்த வேரியண்டுகளுக்கு தள்ளுபடிகள் கிடையாது. இதன் விலையை ஒப்பிடும்போது மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி காரின் விலை தான் குறைவாக உள்ளது.
நெக்ஸான் இவி பிரைம் காரை பொருத்தவரை 30 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் 129எச்பி பவரை வெளிப்படுத்தும் மோட்டாரை கொண்டதாக இருக்கிறது. இது முழு சார்ஜில் 312 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் காராக உருவாக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் இவி மேக்ஸ் காரை பொறுத்தவரை 40.5 கிலோ வாட் ஹவர் 143 எச்பி பவரை வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 437 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரில் இதே பேட்டரி மற்றும் மோட்டார் தான் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் இதே மாதிரியான பவர் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஞ்சில் மாறுபாடு இருக்கிறது. நெக்ஸான் இவி பிரைம் கார் 325 கிலோமீட்டர் ரேஞ்சையும், இவி மேக்ஸ் கார் 465 கிலோமீட்டர் ரேஞ்சையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிசம்பர் மாதம் கார்களுக்கான தள்ளுபடி மிக அதிகமாக இருக்கும் அதன்படி தற்போது டாடா நிறுவனம் தனது ஃப்ரீ ஃபேஸ்ஃலிப்ட் நெக்சான் இவி காருக்கு ரூபாய் 2.60 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால் இந்த மாதமே இந்த காரின் ஸ்டாக்குகள் எல்லாம் விற்று தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









