இவ்ளோ அழகான காரா மாத்திட்டாங்களா! இனி டாடாகிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மண்டியிடனும் போலையே..
டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற கார் மாடல்களில் நெக்ஸான்-ம் ஒன்றாகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலை டாடா மோட்டார்ஸ் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என பலவிதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தற்போது டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது. ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதை முன்னிட்டே தற்போது டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது.

ஏற்கனவே கர்வியான தோற்றத்தில் இருக்கும் இந்த காருக்கு கூடுதல் கர்வியான அமைப்பை புதுப்பித்தலின்கீழ் டாடா வழங்கி இருக்கின்றது. டாடாவின் கான்செப்ட் மாடலான கர்வ் (Curvv) மாடலை தழுவியே புதிய நெக்ஸான் இவி-யை டாடா அப்டேட் செய்திருக்கின்றது. ஆகையால், வேற லெவல் அழகிய தோற்றத்தில் புதிய நெக்ஸான் இவி காட்சியளிக்கின்றது.
இந்த காருக்கான புக்கிங் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று உலக மின் வாகன தினம் ஆகும். இந்த தினத்திலேயே ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவிக்கான புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றது. காலை 8 மணி அளவில் அது தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புக்கிங் கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். இதைத் தொடர்ந்து இதன் விலைகள் இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் ஆகிய இரு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனை லாங் ரேஞ்ஜ் மற்றும் மிட் ரேஞ்ஜ் என்கிற பெயரிலேயே இனி வரும் நாட்களில் டாடா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. லாங் ரேஞ்ஜ் வேரியண்ட் ஓர் முழு சார்ஜில் 465 கிமீ ரேஞ்ஜையும், மிட் ரேஞ்ஜ் தேர்வு 325 கிமீ ரேஞ்ஜையும் ஓர் முழு சார்ஜில் வழங்கும்.

இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் கூடுதல் ரேஞ்ஜ் திறன் ஆகும். 12 கிமீ மற்றும் 13 கிமீ ரேஞ்ஜை அது கூடுதலாக வழங்குகின்றது. புதிய நெக்ஸானில் ஜென் 2 வகை மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 16,000 ஆர்பிஎம்மில் 142.6 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.
மேலும், இதனால் வெறும் 8.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் வேகம் மற்றும் ரேஞ்ஜ் திறன் மட்டுமே அப்கிரேட் செய்யப்படவில்லை. அதன் என்விஎச் அளவும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் மிகவும் குறைவான அதிர்வுகள் மற்றும் சத்தமே கேபினுக்குள் இருக்கும். மேலும், குறைவான ரோலிங் ரெசிஸ்டன் டயரும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது காரின் மிக சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் ரேஞ்ஜ் திறனுக்கு பெரும் உதவியாக இருக்கும். சிறப்பம்சங்கள் விஷயத்திலும் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவி நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் இருக்கின்றது. வி-டூ-எல் (Vehicle to Load) மற்றும் வி-டூ-வி (Vehicle to Vehicle) சார்ஜிங் திறன்களையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரிலும் இதுமாதிரியான வசதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வி-டூ-எல் வாயிலாக 3.3 kVA வரையிலும், வி-டூ-வி செயல்முறையின்போது 5 kVA சார்ஜ் செய்துக் கொள்ள புதிய நெக்ஸான் அனுமதிக்கும். இதைத்தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எக்ஸ் பிரஸ் கூலிங் மற்றும் ஆட்டோ டிஃபாக்கர் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா சென்சார் உடன், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் முன் பக்க பார்க்கிங் அசிஸ்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் ஐசிஇ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் சிலவும் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவி-யில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த நிலையிலேயே மிகுந்த கவர்ச்சியான காராக ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இது இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை மேலும் பல மடங்காக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









