சிங்கிள் சார்ஜில் 465 கிமீ ஓடும்! நாடே காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது! போட்றா வெடிய!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டாடா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

மிட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார், மொத்தம் 2 வெர்ஷன்களில் கிடைக்கும். இதில் மிட் ரேஞ்ச் வெர்ஷனின் ஆரம்ப விலை 14.74 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் ஆரம்ப விலை 18.19 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Tata Nexon EV Facelift Side View

டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிட் ரேஞ்ச் வெர்ஷனில் 30 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 325 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் லாங் ரேஞ்ச் வெர்ஷனில் 40.5 kWh பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 465 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறப்பான ரேஞ்ஜை பெற்றிருப்பதுடன், பல்வேறு அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

Tata Nexon EV

இதில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புது முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புது 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமரா ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் ஆகிய அம்சங்களும் டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகள் எல்லாம் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தை அதிகரித்து கொள்வதற்கு, புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதில், டாடா பன்ச் இவி (Tata Punch EV) மிகவும் முக்கியமானது. நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்திலோ, டாடா பன்ச் இவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 2, 2023, 21:54 [IST]
English summary
Tata nexon ev facelift deliveries commence all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+