இந்த வீடியோவை பாக்காதீங்க... பாத்தீங்க டாடாவோட இந்த எலெக்ட்ரிக் காருதான் வேணும்னு அடம் பிடிப்பீங்க!

டாடா மோட்டார்ஸ் அதன் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் இவியின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. சமீபத்திலேயே இந்த காரை வெளியீடு செய்தது. மேலும், இதன் விலைகள் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்றன.

அன்றைய தினமே இவ்வாகனத்தின் விற்பனையும் அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் காரின் பக்கம் மின்சார வாகன பிரியர்களைக் கவரும் வேலையில் களமிறங்கி இருக்கின்றது, நம்ம டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன் அடிப்படையில், ஓர் வீடியோவை டாடா தற்போது வெளியிட்டு உள்ளது.

Tata nexon ev facelift official video

அந்த வீடியோவில் எலெக்ட்ரிக் காரின் அனைத்து சிறப்புகளும் விளக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலம் எந்த அளவிற்கு அது மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதை இந்த வீடியோ வாயிலாக டாடா மோட்டார்ஸ் தெளிவுப்படுத்தி இருக்கின்றது. மின்சார வாகனத்தை வாங்கும் பிளானில் நீங்கள் இருப்பீர்கள் என்றால், இந்த சமயத்தில் இந்த வீடியோவையும் பார்ப்பீர்கள் என்றால், கட்டாயம் டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்டையே வாங்கிடலாமா என யோசிப்பீர்கள்.

அந்த அளவிற்கு புதிய நெக்ஸான் இவியையும், இந்த வீடியோவையும் டாடா மோட்டார்ஸ் தரமானதாக உருவாக்கி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் கர்வ் எனும் கான்செப்ட் கார் மாடலை வெளியீடு செய்தது. இதனை மின்சாரம் மற்றும் ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின்) ஆகிய மோட்டார் வெர்ஷன்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Tata nexon ev side view

இந்த காரின் டிசைன் தாத்பரியத்தை பயன்படுத்தியே புதிய நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அப்கிரேட் செய்திருக்கின்றது. இதனாலேயே ஏற்கனவே கவர்ச்சியான தோற்றத்தில் இருந்த கார் மேலும் கவர்ச்சியானதாக மாறி இருக்கின்றது. அந்தவகையில், என்னென்ன கவர்ச்சி அம்சங்களை எல்லாம் இந்த கார் தாங்கி இருக்கின்றது என்பதையே தற்போது டாடா வெளியிட்டு இருக்கும் வீடியோ தெளிவுப்படுத்துகின்றது.

புதிய நெக்ஸான்.இவியின் முகப்பு பகுதி முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. லைட்டிங் அமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் மேல் பகுதியில் மெல்லிய இழை போன்ற பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்கு, பம்பரின் இரு முனைகளில் குட்டியான, அதேவேளையில், மிகவும் பிரகாசமாக ஒளிக்கும் ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மெல்லிய லைட் பார் சார்ஜிங் அளவைக் குறிக்கும் விதமாகவும் எரியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் பக்கவாட்டு பகதி இன்டிகேட்டரை போலவும் செயல்படும். இவையே காரின் முகப்பு பகுதிக்கு மிகுந்த அழகைச் சேர்க்கும் வகையில் இருக்கின்றது. இதேபோல் பக்கவாட்டு மற்றும் பின் பக்கத்தில் பல்வேறு மாற்றங்களை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது.

அந்தவகையில், 'X' தீமில் பின் பக்கத்தை டாடா மோட்டார்ஸ் அலங்கரித்து இருக்கின்றது. இங்கும் வெல்கம் லைட் செட்-அப் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், வெளிப்புற தோற்றம் விஷயத்தில் இந்த கார் வேற லெவலில் இருக்கின்றது. வெளிப்புறத்தைபோலவே இந்த காரின் உட்பக்கமும் வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது.

டாடா லோகோவை பிரதிபலிக்கும் டிஜிட்டல் வகை ஸ்டியரிங் வீல், 10.25 அங்கு டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 12.3 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் புதிய நெக்ஸான் இவியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, நவீன கால சொகுசு கார்களையே தோற்கடிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் டிரான்ஸ்மிஷன் லிவர், சி டைப் சார்ஜிங் போர்ட், வென்டிலேஷன் வசதி கொண்ட லெதர் இருக்கைகள், கோப்பைகளை தாங்கும் வசதிக் கொண்ட ஆரம் ரெஸ்ட், வாய்ஸ் அசிஸ்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர நிறுவனத்தின் இசட் கன்னெக்ட் அம்சமும் புதிய நெக்ஸான் இவியில் இடம் பெற்றிருக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் மிக அதிகமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், அவசர கால அழைப்பு வசதி, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ஹில் அசென்ட் மற்றும் டெசன்ட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, இஎஸ்பி, கண்களுக்கு தெரியாத ரியர் வைப்பர், ஆட்டோ ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு பதிலாக லாங் ரேஞ்ஜ் மற்றும் மிட் ரேஞ்ஜ் என்கிற தேர்வுகளிலேயே புதிய நெக்ஸான்.இவி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 465 கிமீ ரேஞ்ஜையும், மிட் ரேஞ்ஜ் தேர்வு 325 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என கூறப்படுகின்றது.

இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலும் 12 கிமீ முதல் 13 கிமீ வரை அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வில் 40.5 kWh பேட்டரி பேக்கும், 106.4 kW பவர் மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் மிட் ரேஞ்ஜ் தேர்வில் 30 kWh பேட்டரி பேக்கும், 95 kW மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இவை ஜென் 2 வகை மின்சார மோட்டார் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும். இதுபோன்ற காரின் அனைத்து சிறப்புகளையும் விளக்கும் வீடியோவையே டாடா வெளியிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான்.இவி அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய நெக்ஸானை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக காம்பேக்ட் எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் பிரிவன் தலைவனாக டாடா மோட்டார்ஸ் இன்னும் பல காலங்களுக்கும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 11, 2023, 21:17 [IST]
English summary
Tata nexon ev facelift official video out here is full details about updates
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+