புதிய டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் ரிவியூ!! எலக்ட்ரிக் காரை ஓட்டுவதே தனி ஃபீல் தான் - தமிழ் ரிவியூ வீடியோ!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பிரபலமான நெக்ஸான் கார்களை அப்டேட் செய்து வருகிறது. முதலாவதாக, டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சனான நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரும் வெளியீடு செய்யப்பட்டது. இவை இரண்டின் விலைகள் வருகிற செப்.14ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்கிடையில், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் என இரு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. இதில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஏற்கனவே நாங்கள் யுடியூப்பில் பதிவிட்டுள்ளோம். இந்த நிலையில், நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் டெஸ்ட் டிரைவ் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளோம். அதனை கீழே காணலாம்.
புதிய டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் ஓட்டுவதற்கு எவ்வாறு உள்ளது? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் என்னென்ன மாற்றங்களை புதியதாக கொண்டுவந்துள்ளது? என்பதை இந்த வீடியோவின் மூலம் அறியலாம். எரிபொருள் என்ஜினை கொண்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று, புதிய நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரும் கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. ஹெட்லைட் செட்அப் மிகவும் மெல்லியதாக, மிகவும் அட்வான்ஸான தோற்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையில் செல்லும் எல்இடி ஸ்ட்ரிப் ஹெட்லைட்களை இணைப்பது மட்டுமின்றி, கார் சார்ஜ் ஆகுவதை சுட்டிக்காட்டும் இண்டிகேட்டராகவும் செயல்படும்.


Click it and Unblock the Notifications








