Tata Nexon EV Max காரில் இப்படி ஒரு விஷயம் வரப்போகுதா! இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max). இந்த எலெக்ட்ரிக் காரில் டார்க் எடிசன் (Dark Edition) என்ற புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு டார்க் எடிசன் என்ற பெயர் ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆம், கடந்த காலங்களில் டாடா நிறுவனத்தின் பல்வேறு கார்களில் டார்க் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய டார்க் எடிசன் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. டார்க் எடிசன் என்ற பெயருக்கு ஏற்ற வகையில், இந்த புதிய மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கருப்பு நிற அலங்கார வேலைப்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் மாடல் பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டார்க் எடிசன் என்பதை குறிக்கும் வகையில், பேட்ஜ்களும் வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர புதிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால், வழக்கமான டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்தும் அப்படியே டார்க் எடிசன் மாடலிலும் வழங்கப்படும். இதன்படி டார்க் எடிசன் மாடலில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் என ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
அதேபோல் செயல்திறனில் எந்த மாற்றமும் இருக்காது. வழக்கமான டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் உள்ள அதே 40.5 kWh பேட்டரிதான், டார்க் எடிசன் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 453 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இது சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பான ரேஞ்ச் (Range) ஆகும். டார்க் எடிசன் மாடலின் வருகைக்கு பின்னர், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசனை தொடர்ந்து, நடப்பு 2023ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) ஆகியவை ஆகும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஓரளவிற்கு குறைவான விலையில் வரலாம் என கூறப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் 'கிங்' ஆக உள்ளது. அந்த பெருமையை தக்க வைத்து கொள்வதற்காக தொடர்ச்சியாக பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








