பெட்ரோல், டீசல் வண்டிகளை வாய் பிளக்க வைத்த டாடா எலெக்ட்ரிக் கார்! நாளைக்கு தரமான சம்பவம் காத்துகிட்டு இருக்கு!
சாகச பயணங்களை செய்பவர்கள் மத்தியில் கே2கே (K2K) மிகவும் பிரபலம். காஷ்மீர் டூ கன்னியாகுமரி (Kashmir To Kanyakumari) என்பதைதான் சுருக்கமாக K2K என அழைக்கின்றனர். பொதுவாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களில்தான் K2K பயணங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் இவ்வளவு அதிகமான தொலைவை கடப்பது மிகவும் சிரமம். ஆனால் அதை செய்வதற்கு டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார் தற்போது தயாராகி விட்டது. இந்திய சந்தையின் புரட்சிகரமான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி. கடந்த காலங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் நிறைய சாதனைகளை செய்துள்ளது.

இந்த வரிசையில் மற்றொரு சாதனையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் படைக்கவுள்ளது. டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் நாளை (பிப்ரவரி 25) K2K பயணத்தை தொடங்கவுள்ளது. ஸ்ரீநகரில் தொடங்கும் இந்த பயணம் கன்னியாகுமரியில் முடிவடையும். வெறும் 4 நாட்களில் இந்த பயணத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 4 நாட்களில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடக்க வேண்டும்.
எனவே ஒவ்வொரு நாளும் 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் சார்ஜ் செய்வதற்காக மட்டுமே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் நிறுத்தப்படும். இதன் மூலம் K2K பயணத்தை மிக வேகமாக மேற்கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் என்ற சாதனையை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் படைக்கவுள்ளது.

இந்த பயணத்தில் பயன்படுத்தப்படவிருப்பது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் கார் ஆகும். டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் 'லாங் ரேஞ்ச்' வெர்ஷன்தான் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலெக்ட்ரிக் காரில், 40.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 453 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் சந்தேகமில்லை. 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 56 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். எனவே காஷ்மீர் டூ கன்னியாகுமரி பயணத்தை திட்டமிட்டபடி, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் கார் வெற்றிகரமாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 16.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக திகழ்கிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. K2K பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் விற்பனை உயரும் என டாடா எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications








