விற்பனையில் தொடர்ச்சியாக சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் இவி! விலை இவ்ளோ குறைவா இருந்தா யாருதான் வாங்க மாட்டாங்க
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றே நெக்ஸான் இவி. முதலில் இந்த கார் மாடல் இசிஐ (எரிபொருள் எஞ்ஜின் கொண்ட) வாகனமாக மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வந்த நிலையில் மின்சார வெர்ஷனிலும் டாடா விற்பனைக்குக் களமிறக்கியது.
இதுவே நிறுவனம் தனி நபர் பயன்பாட்டிற்காக விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இப்போதைய நிலவரப்படி நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் என்கிற இரு விதமான மாடலாக நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் விற்பனையில் அசாத்தியமான சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 50 ஆயிரம் யூனிட் விற்பனை மைல்கல்லையே நெக்ஸான் இவி தற்போது எட்டி இருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் முதன் முதலில் 2020 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அப்போதில் இருந்து இப்போது வரை இந்திய எலெக்ட்ரிக் கார்கள் உலகின் பெஸ்ட் செல்லிங் இ-காராக நெக்ஸான் இவி இருந்து வருகின்றது. இதன் பக்கம் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் அவ்வப்போது அப்டேட்டுகளையும் வழங்கி வருகின்றது.

தொழில்நுட்ப வசதி மற்றும் அதிக ரேஞ்ஜ் என பலவற்றை தொடர்ச்சியாக அது அப்டேட் வாயிலாக வழங்கிய வண்ணம் இருக்கின்றது. எனவேதான், சந்தையில் தற்போது பலதரப்பட்ட அளவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றபோதிலும் நெக்ஸானை அடித்துக் கொள்ள எந்த மின்சார காராலும் முடியவில்லை.
இதன் விளைவாகவே தற்போது நெக்ஸான் இவி-யால் 50 ஆயிரம் யூனிட் விற்பனையை அதனால் எட்ட முடிந்திருக்கின்றது. 500 அதிகமான நகரங்களில் டாடா நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் பயன்பாட்டால் பல மில்லியன் டன் கார்பன் உமிழ்வு தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

பலர் எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு நீண்ட தூர டிராவலை செய்ய முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். டாடாவின் இந்த எலெக்ட்ரிக் காரைக் கொண்டு ஒரு சிலர் ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற டாடா நெக்ஸானைச் சுற்றிலும் நல்ல மாதிரியான கருத்துக்கள் பரவி வருவதும் அந்த காரை அதிகப்படியானோரை வாங்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.
டாடா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளர்கள் மிக சுலபமாக நுகரும் வகையில் நாடு முழுவதும் சார்ஜிங் மையங்களை அதிகளவில் கட்டமைத்திருக்கின்றது. சுமார் 6 ஆயிரம் சார்ஜிங் மையங்களை அது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சார்ஜிங் நெட்வொர்க்கை மேலும் விரிவாக்கம் செய்கின்ற முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

ஆகையால், கூடிய விரைவில் டாடா மோட்டார்ஸின் சார்ஜிங் மையங்களை தடையில்லாமல் அதிகளவில் நாட முடியும் என தெரிகின்றது. இப்போதைய நிலவரப்படி நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 16.49 லட்சம் ஆரம்ப விலையிலும், நெக்ஸான் இவி பிரைம் 14.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது நெக்ஸான் இவி 50000 யூனிட் விற்பனையை எட்டி இருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் விரைவில் இந்த உலகத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆளும் என்பது அப்பட்டமாக உறுதியாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









