இது மட்டும் நடந்துட்டா மொத்த கூட்டமும் டாடா ஷோரூம்லதான் இருக்கும்! பதற்றத்தில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா நெக்ஸான். இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய மாடல் குறித்த முக்கியமான தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

இதன்படி டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாஸ் வசதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டாடா நெக்ஸான் காரின் மூத்த உடன்பிறப்புகளான டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களில் ஏற்கனவே அடாஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வரிசையில் டாடா நெக்ஸான் காரும் அடாஸ் வசதியை பெறவுள்ளது.

இது மட்டும் நடந்துட்டா மொத்த கூட்டமும் டாடா ஷோரூம்லதான் இருக்கும்! பதற்றத்தில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள்!

இதுதவிர டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஸ்டியரிங் வீலும் கொடுக்கப்படவுள்ளது. இதுதவிர புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களையும் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பெறவுள்ளது. இதன் காரணமாக டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் புதிய மாடலிலும் கொடுக்கப்படலாம். இந்த இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் டாடா நெக்ஸான் காரின் தற்போதைய பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும்.

இது மட்டும் நடந்துட்டா மொத்த கூட்டமும் டாடா ஷோரூம்லதான் இருக்கும்! பதற்றத்தில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள்!

ஆனால் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இதற்கு பதிலாக புதிய பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புதிய பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஹெச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த புதிய பெட்ரோல் இன்ஜின் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸான் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற கார்களுடன், டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், மேற்கண்ட கார்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இல்லாவிட்டால் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும். இந்த புதிய மாடல் தற்போது சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய 2 பிரபலமான கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 16:25 [IST]
English summary
Tata nexon facelift adas
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+