நாடே தவம் கிடக்கும் டாடா கார் ஷோரூம்களுக்கு வருகை! நாளை லான்ச் ஆவதால் மாருதி, ஹூண்டாய்க்கு குளிர் காய்ச்சல்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. இந்த சூழலில் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நாளை (செப்டம்பர் 14) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே இந்த புதிய மாடலின் விலை (Price) எவ்வளவு? என்பது நாளை தெரியவந்து விடும்.

நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போதே டீலர்ஷிப்களுக்கு (Dealerships) வர தொடங்கியுள்ளது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட் உடனேயே டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
செயல்திறனை பொறுத்தவரையில், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் (Petrol) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின்கள் ஆகும். இதில் பெட்ரோல் இன்ஜின் உடன் மொத்தம் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகும். அதே நேரத்தில் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.
இதில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட்-இன் நேவிகேஷன் சிஸ்டத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் இலுமினேட்டட் லோகோ உடன் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீலும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 6 கலர்கள் மற்றும் 11 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற போட்டி மாடல்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








