போட்டி நிறுவனங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட போகும் டாடா கார்! முன்பதிவு தொடங்கியது! ஷோரூம்களில் திருவிழா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள டாடா நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) மாடல் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை வெறும் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

Tata Nexon Facelift

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் செப்டம்பர் 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் இந்த புதிய மாடலின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Nexon Facelift

இதில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகாட்சமாக 120 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன் மொத்தம் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகியவை ஆகும். இதுதவிர டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 115 ஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன், பல்வேறு அதிநவீன வசதிகளும், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) உள்ளிட்ட பல்வேறு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு, டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, September 4, 2023, 23:58 [IST]
English summary
Tata nexon facelift bookings open all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+