Tata Nexon Facelift கார் இந்த கெட்-அப்பில் வந்தால், மாருதியால் என்ன செய்ய முடியும் - படங்கள் இணையத்தில் லீக்!!

அடுத்த 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) காரின் சோதனை மாதிரி ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஓர் தனியார் இடத்தில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களையும், புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் எந்த மாதிரியான புதிய அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் இனி பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபலமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று டாடா நெக்ஸான் ஆகும். 2019இல் முதன்முதலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் அதன்பின் சில பல அப்டேட்களை பெற்றுள்ளது. அந்த வரிசையில் அடுத்த 2024இல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை நெக்ஸான் பெற உள்ளது. இதற்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை மாதிரி ஒன்று மஹாராஷ்டிரா நம்பர் பிளேட் உடன் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், நெக்ஸான் காரின் முன்பக்கம் மாற்றியமைக்கப்படும் என்பது உறுதி. பின்பக்கத்தில் சில திருத்தங்கள் செய்யப்படலாம். மற்றப்படி காரின் பக்கவாட்டில் பெரியதாக எந்த அப்டேட்டும் இருக்காது. ஆனால் உட்புற கேபினில் அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

தற்போது இணையத்தில் கிடைத்துள்ள மேற்கண்ட வீடியோவில், கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால், எதனையும் சரியாக பார்க்க முடியவில்லை. ஹெட்லைட்ஸின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளதுபோல் தெரிகிறது. ஹெட்லைட் & எல்இடி டிஆர்எல்-கள் தனியாக இருக்கும். முன்பக்கத்தில் ஹெட்லைகள் இரண்டையும் இணைக்கும் வகையில் லைட் பார் வழங்கப்படுவது குறித்து தற்போது வரையில் எந்த ஆதாரம் இல்லை.

Tata Nexon Facelift

க்ரில் அமைப்பை நன்கு பெரியதாக எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் காரின் உயரத்திலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காரை போலவே சக்கரங்களும் மறைக்கப்பட்டுள்ளதால், நெக்ஸானின் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படலாம்.

பின்பக்கத்திலும் பம்பர், டெயில்லைட்கள் உள்பட பல பாகங்களில் அப்டேட்களை டாடா வழங்க முயற்சிக்கும். முன்பக்கத்தில் ஹெட்லைகளை இணைக்கும் வகையில் லைட் பார் வழங்கப்படாவிடினும், பின்பக்கத்தில் டெயில்லைட்களை இணைக்கும் வகையில் லைட் பார் நெக்ஸான் காரில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. வீடியோவில், காரின் உட்புற டேஸ்போர்டும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. ஆதலால் புதிய டிசைனில் டேஸ்போர்டு இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.

Tata Nexon Facelift

சமீபத்தில் டாடா நிறுவனம் அப்டேட் செய்த ஹெரியர் & சஃபாரி கார்களில் பெரிய அளவில் 10.25 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது. இதனை 2024 நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் எதிர்பார்க்கிறோம். இதனுடன், புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டாப் வேரியண்ட்களில் அடாஸ் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக 2024 நெக்ஸான் காரில் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

2019இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சமீப காலத்தில்தான் நெக்ஸான் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆதலால் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை விரைவாக இந்த 2023ஆம் ஆண்டிலேயே வழங்கினால் நெக்ஸானின் விற்பனை இன்னும் டாப் கியரில் செல்லும் என்பது எங்களது கருத்து. நெக்ஸானின் புதிய 3-சிலிண்டர் டர்போ என்ஜின் எந்த அளவிற்கு வரவேற்பை பெற உள்ளது என்பதை அறியவும் ஆவலாக உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2023, 14:12 [IST]
English summary
Tata nexon facelift car spied video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+