ஆள் அடையாளமே தெரியாமல் மாறப்போகும் டாடா நெக்ஸான் கார்! மாருதி,ஹூண்டாய் எல்லாம் இதுக்கு முன்னாடி தோத்துடும்!
டாடா நிறுவனம் தனது அடுத்த அறிமுகமாக நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. பழைய நெக்ஸான் காருக்கும் புதிய நெக்ஸான் காருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்று. இந்த கார் அறிமுகமான போதே இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக விமர்சனங்கள் வந்ததால் பலர் இந்த காரை வாங்க விரும்பினர். விபத்துகளில் இந்த கார் பல நேரங்களில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது என்பதால் இந்த காருக்கு மக்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த நெக்ஸான் காரை அப்டேட் செய்து ஃபேஸ்லிஃப்ட் காராக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி டாடா நிறுவனம் இந்த நெக்ஸான் காரை அப்டேட் செய்து தற்போது பொது சாலைகளில் டெஸ்ட் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புறத்தைப் பொருத்தவரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் கர்வ் காரின் கான்செப்ட் கார் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த காரின் டிசைனை இன்ஸ்பயர் செய்துதான் இந்த காரின் வெளிப்புறத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இந்த காரின் முன் பக்கம் கிரில் பகுதி முற்றிலும் புதுமையான வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இதன் பம்பர் பகுதியும் டிசைன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்-லைட் பகுதி புதிய எல்இடி ஹெட் லைட் டிசைனை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிளஸ்டர் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது போக இந்த காரில் புதிய அலாய் வீல்கள், புதிய டெயில லேம்ப், பின்பக்கம் நீளமான எல்இடி லைட் ஸ்டிரைப் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பின்பக்க பம்பர் மற்றும் டெயில்கேட் ஆகியன இந்த காரில் இடம் பெற்றுள்ளன. பக்கவாட்டு டிசைன் பெரும்பாலும் தற்போது உள்ள காரில் உள்ள அதே டிசைன் தான் இருக்கிறது.

இந்த காரின் பின்பக்கம் கூப்பே வடிவிலான ரூஃப் லைன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் உட்புறவும் டிசைன் அம்சங்கள், அதில் உள்ள தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட எல்லாம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் தற்போது உள்ள டிரெண்டிற்கு ஏற்றபடி இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதாக இந்த கார் மாறியுள்ளது.
10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் வருகிறது. இது போக மாற்றியமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், மற்றும் டேஷ் போர்டுகள், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 2 ஸ்போக்ஸ் ஸ்டேரிங் வீல் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.
இது போக டச் அடிப்படையிலான எச்பிஏசி கண்ட்ரோல்கள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், எலக்ட்ரானிக் சன் ரூஃப், 6 ஏர் பேக்குகள், லெதர் சீட் அப்ஹோல்சரி வென்டிலேட்டட் சீட்டுகள் ஆகிய கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கார் தன் அடையாளத்தையே மாற்றியுள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 பி எஸ் பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஏற்கனவே இருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாற்றப்பட்டு 1.2 லிட்டர் டர்போ டிஐ பெட்ரோல் இன்ஜினாக பொருத்தப்படுகிறது. இது 125 பிஎஸ் பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது அல்ட்ராஸ் காரில் உள்ள டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ரசிகர்கள் பலர் இந்த நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை காண ஆர்வமாக இருக்கின்றனர். முற்றிலும் ஆள் அடையாளமே தெரியாமல் மாறப்போகும் இந்த காரை வாங்க வாடிக்கையாளர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த கார் மார்கெட்டில் விற்பனை புரட்சியையே செய்யப்போகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.


Click it and Unblock the Notifications









