மாருதி ஷோரூம்கள் காத்து வாங்க போகுது! ரகசியமாக வேலையை ஆரம்பித்த டாடா! லியோ படத்தை ஓவர்டேக் செய்த எதிர்பார்ப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் பலரின் மனம் கவர்ந்த காராக இருப்பது டாடா நெக்ஸான் (Tata Nexon). குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் (Crash Test), 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கிய முதல் இந்திய கார் இதுதான்.

டாடா நெக்ஸான் காருக்கு பிறகுதான், மற்ற இந்திய கார்கள் எல்லாம் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்க தொடங்கின. இப்படி உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த டாடா நெக்ஸான் கார் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, தற்போது அதிகம் விற்பனையாகி வரும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக நெக்ஸான் திகழ்கிறது.

மாருதி ஷோரூம்கள் காத்து வாங்க போகுது! ரகசியமாக வேலையை ஆரம்பித்த டாடா! லியோ படத்தை ஓவர்டேக் செய்த எதிர்பார்ப்பு

கண்ணு பட்ற போகுது!

இந்த உத்வேகத்தை தக்க வைத்து கொள்வதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. உருவத்தை முழுவதும் மறைத்த நிலையில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சோதனை செய்து கொண்டுள்ளது.

டிசைன் வேற லெவலுக்கு மாற போகுது!

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டிசைன் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) கோலாகலமாக நடைபெற்றது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் (Tata Curvv) என்ற புதிய ஐசி இன்ஜின் (ICE - Internal Combustion Engine) காரை காட்சிக்கு வைத்திருந்தது. இந்த காருக்கும், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு டிசைனில் நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாருதி ஷோரூம்கள் காத்து வாங்க போகுது! ரகசியமாக வேலையை ஆரம்பித்த டாடா! லியோ படத்தை ஓவர்டேக் செய்த எதிர்பார்ப்பு

இது சும்மா டிரைலர்தாம்மா!

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில், முற்றிலும் புதிதாக டிசைன் செய்யப்பட்ட க்ரில் மற்றும் பம்பர் ஆகியவை வழங்கப்படலாம். அதேபோல் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியரும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்த புதிய மாடலில், டேஷ்போர்டு லேஅவுட் புதியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் இடம்பெறலாம்.

பவர் ஃபுல் பெட்ரோல் இன்ஜின்!

இதுதவிர இன்னும் பல்வேறு புதிய வசதிகள், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டிருக்கும். டாடா நெக்ஸான் காரில் தற்போதைய நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இதற்கு பதிலாக புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஹெச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கலாம். எனவே தற்போது வழங்கப்படும் பெட்ரோல் இன்ஜினை காட்டிலும் இந்த புதிய பெட்ரோல் இன்ஜின் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதுதவிர டாடா நெக்ஸான் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படலாம்.

வருகிறது சிஎன்ஜி!

டாடா நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் மாடல், தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைத்து வருகிறது. இருப்பினும் இந்த காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும்போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தன பேருக்கும் செக்!

டாடா நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2023ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை சமயத்திலோ அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கு டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 16:08 [IST]
English summary
Tata nexon facelift india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+