டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார்ல இதெல்லாம் கவனிச்சீங்களா? இதை தான எதிர்பார்த்தோம்!
டாடா நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என்ற இரண்டு புதிய கார்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய பெட்ரோல்/ டீசல் இன்ஜின் ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் காரில் பழைய காரிலிருந்து என்னென்ன அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பாக இந்த நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் 2017ம் ஆண்டு தான் முதன் முறையாக அறிமுகமானது. இந்த கார் அறிமுகமானபோதே இந்த கார் மீது மக்கள் மத்தியில் மோகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இந்த காரின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பிறகே இந்த காருக்கு நல்ல மார்கெட் உருவாகி விற்பனை அதிகமானது.

இதன்படி இந்த கார் தற்போது இந்தியாவில் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்து ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக வெளியிட்டுள்ளது. அதே நேரம் டாடா நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் வெளியிட்டு வருகிறது. அதையும் அப்டேட் செய்து ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான்.இவி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
வெளிப்புற அப்டேட்: இந்த காரில் பை- ஃபங்ஷனல் எல்இடி ஹெட்லைட், மற்றும் சீக்கோன்ஷியல் எல்இடி டிஆர்எல்கள், வெல்கம் மற்றும் குட்பை பங்ஷன் உடன் கூடிய எல்இடி டெயில் லைட், ஆரோ இன்செர்ட்களுடன் கூடிய டைமண்ட் கட் அலாய் வீல், மறைந்திருக்கும் வைப்பரை கொண்ட ஸ்பாயிலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புற அப்டேட்: இந்த காரின் உட்புறத்தில் உள்ள டேஷ்போர்டு 3 டோன் கலர்களில் வழங்கப்பட்டுள்ளது. இதில் லெதரால் ஆன மிட் பேடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங் வீலை பொருத்தவரை 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதன் நடுவே டாடா லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இது போல லெதரால் ஃபினிஷ் செய்யப்பட்ட ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்ச அப்டேட்: இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பின்பக்க சீட்டில் பயணிகள் அமர்ந்திருப்பதை கண்காணித்து உறுதி செய்யும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள்,பயணிகளுக்கான ஏர்பேக் டிஆக்டிவேசன் ஸ்விட்ச், குழந்தைகளுக்கான ஐஎஸ்ஓ ஸ்விட்ச், ஆகிய அம்சங்கள் உள்ளது.

புதிய பாதுகாப்பு அப்டேட்: எமர்ஜென்ஸி கால் மற்றும் பிரேக்டவுண் கால் ஆகிய 2 பட்டன்கள் உள்ளன. அவசர காலங்களில் எமர்ஜென்ஸி காலையும், கார் நடுவழியில் பிரேக் டவுண் ஆனால் பிரேக்டவுன் கால் பட்டனையும் பயன்படுத்தலாம். இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டம், முன்பக்க பார்க்கிங் சென்சார், பிளைன்ட் வியூ மானிட்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளது.
ஆடியோ/இன்ஃபோடெயின்மென்ட் அப்டேட்: இந்த காரின் உட்புறத்தில் ஹார்மன் நிறுவனத்தின் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,டிரைவருக்கான 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோவிற்காக ஜேபிஎல் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் மற்றும் 1 சப் வூஃபர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் கனெக்டெட் கார் அம்சங்களும் உள்ளது. இது 200க்கும் அதிகமான வாய்ஸ் கமெண்ட்ஸ், வாய்ஸ் கமெண்ட்ஸ் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், புதிய தலைமுறை டச் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனம் இந்த காரின் வேரியன்ட் பெயர்களை தற்போது மாற்றியுள்ளன. அதன்படி தற்போது 4 விதமான வேரியன்ட்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ், மற்றுமு் ஃபியர்லெஸ் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.
பெட்ரோல் இன்ஜின் அப்டேட்: இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முதல் ஆபஷனாக 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 பிஎச்பி பவரையும், 170என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் அப்டேட்: இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 114 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் போதுமிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு இருக்கும். இந்த காருக்காக பலர் கார் வாங்குவதை கூட தள்ளி போட்டு காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









